தினேஷ் நந்தன் சகே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தினேஷ் நந்தன் சகே (Dinesh Nandan Sahay; 2 பிப்ரவரி 1936 – 28 சனவரி 2018)[1] என்பவர் இந்தியக் காவல்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பீகார் காவல்துறைத் தலைவராகவும், பின்னர் திரிபுரா, சத்தீசுகர் மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றினார் .
Remove ads
இளமை
சகே பீகாரின் மாதேபூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் கிஷோரி தேவி மற்றும் தேவ நந்தன் சகே ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பாட்னாவில் வளர்ந்தார். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பினை முடித்தார். இவர் மஞ்சு சகேயை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
காவல் பணி
1960-ல் இந்தியக் காவல் பணியில் சேருவதற்கு முன்பு எச். டி. அர்ரா கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது பணியினை தொடங்கினார். இதன்பின், பீகார் மாநிலத்தின் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
அரசியல்
காவல் பணி ஓய்வுக்குப் பிறகு சமதா கட்சியில் சேர்ந்தார். 2000 முதல் 2003 வரை சத்தீசுகர் மாநிலத்தின் முதல் ஆளுநராக இருந்தார். சூன் 2003-ல் திரிபுரா ஆளுநரானார். 2009 வரை இந்தப் பதவியில் தொடர்ந்தார். இருப்பினும் பாரம்பரியமாக ஆளுநர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் சகே விதிவிலக்காகக் கூடுதல் காலம் பதவியிலிருந்தார்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads