தியாகராசர் கல்லூரி, மதுரை

மதுரையிலுள்ள ஒரு கலைக் கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

9°54′46.57″N 78°8′51.13″E தியாகராசர் கல்லூரி (Thiagarajar College) என்பது தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள தன்னாட்சி தகுதிப் பெற்ற அரசு உதவிபெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். கருமுத்து தியாகராஜன் என்பவரால் 1949-ஆம் ஆண்டு இக்கல்லூரித் தொடங்கப்பட்டது. மதுரை நகரின் கிழக்கில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி, மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று.

விரைவான உண்மைகள் தியாகராசர் கல்லூரி, மதுரை Thiagarajar College, முகவரி ...
Remove ads

வரலாறு

கருமுத்து தியாகராஜன் செட்டியார் என்பவரால் தியாகராஜர் கல்லூரி என்ற பெயரில் 1949-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி நிறுவப்பட்டு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. அப்போதைய மதராஸ் மாநில ஆளுநரான பாவ்நகர் மன்னர் கிருஷ்ண குமார்சிங்ஜியால் தொடங்கி வைக்கப்பட்டது.[1][2][3] கல்லூரி தொடங்கிய சமயத்தில் மூன்று படிப்புகள் வழங்கப்பட்டன.

அமைவிடம்

தியாகராசர் கல்லூரி, 13 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகரின் கிழக்கில் இராமநாதபுரம் செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

நிர்வாகம்

துறைகள்

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

இந்தத் துறைகளின் கீழ் பல படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்

பட்டயப் படிப்புகள்

  • சுற்றுலா மேலாண்மை
  • தொழிலக மேலாண்மை
  • காப்பீடு மேலாண்மை
  • சில்லறை வர்த்தகத் திட்டமிடல்
  • புள்ளியியல்
  • கணினி அறிவியல்
  • மூலக்கூறு ஒப்புருவாக்கம் மற்றும் நிறமாலைக் காட்டியியல் (முதுகலைப் பட்டயம்)
  • மருத்துவத் தாவரங்கள் பற்றிய படிப்பு
  • மீன்வளர்ப்பு
  • விவசாயம்
  • உணவுப் பொருள் பதப்படுத்துதல்
  • காந்தியச் சிந்தனை (மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் படிப்பு)

இளங்கலைப் படிப்புகள்

பி.காம்.

முதுகலைப் படிப்புகள்

Remove ads

புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள்

இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள், அறிவியல், தொழில், சட்டம், இலக்கியம், நீதித்துறை, திரைப்படம், அரசியல் உள்ளிட்டப் பல துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளனர். அவர்களில் சிலர்:

அரசு அலுவலர்கள்

தொல்லியல் துறை

  • சொ. சாந்தலிங்கம்

அமைச்சர்கள்

  • தங்கபாண்டியன், முன்னாள் தமிழக வணிகவரி்த்துறை அமைச்சர்
  • கா. காளிமுத்து, முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் (1977 - 80), தமிழக சட்டப்பேரவை தலைவர்
  • செல்லூர் ராஜூ

கவிஞர்கள்

திரைத்துறையினர்

திரைப்பட இயக்குநர் சிம்புதேவன்

பேராசிரியர்கள்

பேச்சாளர்கள்

Remove ads

பணியாற்றிய தமிழறிஞர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads