திருக்கோடிக்காவல்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கோடிக்காவல் தமிழ் நாடு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலூக்காவிலுள்ள ஒரு ஊராகும் [4].
Remove ads
அமைவிடம்
இது காவிரியின் வடபாகத்தில் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது. நில நேர்க்கோடு 11.071 நில நிரைக்கோடு 79.521 இந்த ஊரின் அமைவிடம்.
நவக்கிரக தலங்களான சூரியனார் கோயில், கஞ்சனூர் என்பவற்றோடு, மகாராஜபுரம், கதிராமங்கலம் ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். [5]
சிறப்பு
பாடல் பெற்ற தலமான திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.
திருக்கோடிக்காவல் பல சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாகும். திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் வயலின் வாத்தியத்தில் பல நுட்பங்களைப் புகுத்தியவர். அவரே கருநாடக இசைக் கச்சேரிகளில் வயலின் வாத்தியத்தைப் பிரபலப்படுத்தினார் என்ற கருத்தும் உண்டு. செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரின் மருகர் ஆவார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads