திருச்செந்தூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்செந்தூர் தொடருந்து நிலையம் (Tiruchendur railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்நிலையம் திருச்செந்தூரை மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு புனித யாத்திரை இடங்களுடன் இணைக்கிறது.[2]
Remove ads
வரலாறு
திருநெல்வேலிக்கு இரயில் இணைப்பு கிடைத்ததும், சில்லா வாரிய உறுப்பினராக இருந்த ஆறுமுகநேரி மேல வீடு எசு.பி.பொன்னையா நாடார் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிகு இரயில் போக்குவரத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கத் தொடங்கினார். இவர் முன்னெடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து, திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே இரயில் பாதை இணைப்பை நிறுவுவதற்கு ஆதரவாக 1900 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி காலனித்துவ அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, 1903 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆம் தேதியன்று நடைபெற்ற சில்லா வாரியக் கூட்டம் இரு நகரங்களுக்கு இடையே இரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. 1903 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட வாரியத்தால் முன்மொழியப்பட்ட இந்த பாதை தென்னிந்திய இரயில்வே நிர்வாகத்தால் 1904 ஆம் ஆண்டு மாவட்ட வாரியத்தின் செலவில் ஆய்வு செய்யப்பட்டது. இதன் நீளம் 37.60 மைல் என்றும் குறுகிய பாதை அமைக்க ரூ 20,52,000 செலவு பிடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டது. இதன் நிதியுதவிக்கான முன்மொழிவுகள் மாவட்ட வாரியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் மாவட்டத்திற்கு இரயில்வே கட்டுமான நிதியை உருவாக்குவதற்காக சிறப்பு வரி விதித்தனர்.[3] [4] முதல் இரயில் சேவை 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.[5]
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[6][7][8]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருச்செந்தூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 17.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[9][10][11][12]
Remove ads
நிர்வாகம்
திருச்செந்தூர் தொடருந்து நிலையம் தென்னக இரயில்வே பிரிவைச் சேர்ந்த மதுரை கோட்டத்திற்கு உட்பட்டு இயங்கியது.[13]
சேவைகள்
திருச்செந்தூரிலிருந்து புறப்படும் இரயில் வண்டிகள்:
- திருச்செந்தூர் அதிவிரைவு வண்டி (திருச்செந்தூர்- சென்னை எழும்பூர்)
- பாலக்காடு சந்திப்பு-திருச்செந்தூர் பயணிகள் இரயில் வண்டி (பழனி வழியாக)
- திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் இரயில் வண்டி (முன்பதிவு செய்யப்படாதது)
- தூத்துக்குடி-திருச்செந்தூர் பயணிகள் இரயில் வண்டி (முன்பதிவு செய்யப்படவில்லை)
வண்டிகளின் வரிசை[14]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads