திருவரங்க நீலாம்பிகை
கலப்படத்தமிழை கேள்விகேட்டவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) [1] என்பவர் ஒரு தமிழறிஞரும், தமிழாசிரியரும், மொழிப்போர் வீராங்கனையும் ஆவார். இவர் தமிழுடன் வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். மறைமலை அடிகளாரின் மகளாகிய இவர், அவரைப் போன்றே மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந்து கலந்து இருந்த பிறமொழிச் சொற்களைத் தவிர்த்த தனித்தமிழ் நடையைப் பரப்பினார். இதற்கு உதவியாக வடசொற்றமிழ் அகரவரிசை என்ற நூலையும் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் வெளியிட்டார்.

இவர் ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் என்ற தலைப்பில் 601 தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கிலப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார்.[2]
Remove ads
வாழ்க்கை
இன்றைய சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் 6 ஆகத்து 1903 அன்று தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலை அடிகளுக்குப் பிறந்தார் நீலாம்பிகை அம்மையார்.[3] இவருக்கு நாகை நீலாயதாட்சி என்ற பெயர் சூட்டப்பட்டது.[3] நீலாம்பிகை அம்மையாராருக்கு இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களை மறைமலை அடிகள் கற்பிக்கத் தொடங்கினார்.
இவர் தன் 13 வயதில் தந்தையார் எழுதித் தந்த பெற்றாள் கடமை என்ற கட்டுரையைக் கொண்டு மேடையில் சொற்பொழிவாற்றி பாராட்டுகளைப் பெற்றார். தன் 42 ஆண்டு கால வாழ்வில் 15 இக்கும் மேற்பட்ட நூல்களை படைத்தார்.[3]
Remove ads
குடும்பம்
இவரின் கணவர் சைவ நெறியாளரான திருவரங்கனார் ஆவார். திருவரங்கனார் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவி பல நூல்களைப் பதிப்பித்தவர் ஆவார். மறைமலை அடிகள் மீது மிகுந்த பற்று கொண்ட திருவரங்கனார், நீலாம்பிகை அம்மையாரை 10 ஆண்டு காலம் விரும்பி மணந்தார். இந்த இணையருக்கு 11 பிள்ளைகள் பிறந்தனர்.[3] அவர்களில் சுந்தரத்தம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை, பிச்சம்மை, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு ஆகியோரின் பெயர் தெரிய வருகிறது. இவரது மகள்களில் ஒருவரான சுந்தரத்தம்மாளை புலியூர்க் கேசிகனுக்கு மணம் செய்துவித்தனர்.[4] 1944 ஆம் ஆண்டு இவரது கணவர் திருவரங்கனார் இறந்தார். அதற்கு அடுத்த ஆண்டு 1945 ஆம் ஆண்டு நீலாம்பிகை அம்மையார் இறந்தார்.[3]
Remove ads
எழுதிய நூல்கள் சில
- ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
- வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்
- வடசொல் தமிழ் அகராதி
- பிழை நீக்கி எழுதும் முறை
- மக்கட் பெயர் அகரவரிசை
- இல்லப் பெயர் அகரவரிசை
- முப்பெண்மணிகள் வரலாறு
- பட்டினத்தார் பாராட்டிய மூவர்
- மேனாட்டுப் பெண்மணிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads