திருவாங்குளம்

From Wikipedia, the free encyclopedia

திருவாங்குளம்map
Remove ads

திருவாங்களம் (Thiruvankulam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது திருப்பூணித்துறை நகராட்சி மற்றும் கொச்சி பெருநகரத்தின் ஒரு பகுதியாகும். கொச்சி மற்றும் திருவிதாங்கூர் இராச்சியங்களின் நாட்களில், திருவான்குளம் ஒரு எல்லை கிராமமாக இருந்தது. இப்போது கால்வாயாக இருக்கும் காவலீசுவரம் நீரோடை இரண்டு இராச்சியங்களையும் பிரித்தது. கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை (என்.எச் 49) இதன் வழியாக செல்கிறது. இது கொச்சியிலிருந்து நெடுஞ்சாலையில் ஒரு பெரிய சந்திப்பாகும், இது கிழக்கு நோக்கி மூவாற்றுப்புழா மற்றும் தெற்கே கோட்டயம் நோக்கி செல்கிறது. நெரிம்பசேரி மற்றும் கொச்சி துறைமுகத்தை இணைக்கும் விமான நிலையம்-துறைமுக சாலையின் முனையமாக கரிங்காச்சிரா செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் திருவாங்குளம், நாடு ...

நகரம் மற்றும் கொச்சி சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள் அடங்கிய தொழில்துறை பகுதிகளும் இதன் வளர்ச்சிக்கு பங்களித்தன. கொச்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் விளைவாக திருவாங்குளம் விருப்பமான குடியிருப்புப் பகுதியாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக கிராம மக்கள் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு சிறிய நகரத்தின் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Remove ads

புள்ளிவிவரங்கள்

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [1] இதன் மக்கள் தொகை 21,713 ஆகும். ஆண்களில் மக்கள் தொகையில் 50%, பெண்கள் 50%. ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 96% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 96.5%, மற்றும் பெண் கல்வியறிவு 95.5%. திருவாங்குளத்தில், மக்கள் தொகையில் 8% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

பார்வையிடப்பட வேண்டிய இடங்கள்

மலை அரண்மனை

Thumb
வடக்குப் பக்கத்திலிருந்து அரண்மனையின் தோற்றம்

மலை அரண்மனை என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள மிகப் பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கொச்சி இராச்சிய மகாராஜா அரசின் நிர்வாக அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லமாகச் செயல்பட்டு வந்தது.[2] 1865 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை வளாகத்தில் 54 ஏக்கர்கள் பரப்பளவில் பாரம்பரிய பாணியில் கட்டபட்ட 49 கட்டிடங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம், ஒரு பாரம்பரிய அருங்காட்சியகம், மான் பூங்கா, வரலாற்று காலத்திற்கு முந்தைய பொருட்கள் கொண்ட பூங்கா, குழந்தைகள் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. [3]

கேரள அரசின் பாரம்பரிய விவகாரங்கள் துறையால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமான பாரம்பரிய ஆய்வு மையம் (சிஎச்எஸ்) இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

மிகவும் பிரபலமான மலையாளத் திரைப்படமான மணிச்சித்ரதாழ் இந்த அரண்மனையில் படமாக்கப்பட்டது.

கரிங்காச்சிரா தேவாலயம்

கி.பி 722 இல் திருப்பூணித்துறை மலை அரண்மனை அருகே ஒரு யாக்கோபிய சிரிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு புனித ஜார்ஜ் பெயரிடப்பட்டது. கரிங்காச்சிராவின் கட்டனார் ( விகார் ) முந்தைய கொச்சின் மாநிலத்தின் நசரானி சமூகத்தின் பிரதிநிதியாக கருதப்பட்டார். புனித பருமலா திருமேனி கி.பி 1857 இல் இந்த தேவாலயத்தில் ஒரு போதகராக நியமிக்கப்பட்டார்.

இந்த தேவாலயம் 2004 ஆம் ஆண்டில் பேட்ரியார்ச் இக்னேஷியஸ் சக்கா ஐ இவாஸ் ஒரு கதீட்ரலாக உயர்த்தப்பட்டது.

Remove ads

பொருளாதார நடவடிக்கைகள்

இந்த கிராமத்தில் பெரிய பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் ஏராளமான சிறிய மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளன. கேபிள் உற்பத்தியாளரான டிராக்கோ கேபிள் நிறுவனமும், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பெரிய எண்ணெய் நிறுவனங்களும் இங்கு உள்ளன. வேளாண்மை, திருவாங்குளத்தில் வாழ்வாதாரத்திற்கான பிரதான வழிமுறையின் நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்தாலும், இன்னும் நல்ல நிலையில் உள்ளது. தேங்காய், பாக்கு, சாதிக்காய், மற்றும் மிளகு ஆகியவை முக்கிய உற்பத்தியாகும். நெல் சாகுபடி குறைந்து வருகிறது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads