திருவாவடுதுறை

From Wikipedia, the free encyclopedia

திருவாவடுதுறைmap
Remove ads

திருவாவடுதுறை (Thiruvavaduthurai also written as Thiruvaduthurai) என்பது தென்னிந்தியா, தமிழ் நாடு, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள 55 வருவாய் கிராமங்களுள் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

நிருவாகத் தகவல்

மாவட்டம்: மயிலாடுதுறை
வட்டம்: குத்தாலம்[2]
அஞ்சல்: திருவாவடுதுறை
மக்கள் தொகை: 2011 கணக்கெடுப்பின்படி திருவாவடுதுறையில் 1567 குடும்பங்களைச் சேர்ந்த 7093 நபர்கள் (3389 ஆண்கள் + 3704 பெண்கள்) வசிக்கிறார்கள்.[3]

அமைவிடம்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. (கிடைக்கோடு 11°2'30"வ நெடுங்கோடு 79°31'16"கி)[4]

சமயத் தலங்கள்

இங்குள்ள திருவாவடுதுறை ஆதீனம் பிரசித்தி பெற்றது.

அருள்மிகு ஒப்பிலாமுலையம்மை உடனுறை மாசிலாமணியீசுரர்[5] (திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவராதலால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்)[6]முதற் பராந்தகன் காலத்திய கல்வெட்டிலிருந்து இக்கோவில் புரட்டாசி விழாவில் ஒருநாளில் திருமூலர் நாடகமும் - ஆரியக் கூத்தும் நடந்து வந்ததாகத் தெரிய வருகிறது. [7]

ஊர் சிறப்பு

திருவாவடுதுறைக்கு நவகோடி சித்தர்புரம் என்ற ஒரு பெயரும் உண்டு ஒன்பது சித்தர்கள் இவ்விடத்தில் ஒன்பது திசையில் வாழ்ந்ததால் இப்பெயர் வரலாயிற்று. [8]

சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையும் உலகப் புகழ் பெற்றதுமான திருமந்திரத்தை திருமூலர் திருவாவடுதுறையிலேயே இயற்றியதோடு அவர் அங்கேயே சமாதிநிலை அடைந்தார்..[9]

ஊர்க்கோவிலில் வெள்ளை வேம்பு மரம் காணப்படுகிறது.[10]

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும். [11]

ஊரின் பிரபல நபர்கள்

நாதசுவர வித்துவான் டி. என். ராஜரத்தினம் பிள்ளை இந்த ஊரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.

அண்மையிலுள்ள நகரங்கள்

மயிலாடுதுறை, கும்பகோணம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads