தீக்காக்கை

From Wikipedia, the free encyclopedia

தீக்காக்கை
Remove ads

தீக்காக்கை அல்லது மலபார் தீக்காக்கை (Malabar Trogon, உயிரியல் பெயர்: Harpactes faciatus) என்பது திரோகன் குடும்பத்தைச் சார்ந்த பறவை இனமாகும்த. இது இந்தியா, இலங்கை காடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிலபகுதிகளில் உள்ள மலைக் காடுகளில் காணப்படுகிறது. [2]

விரைவான உண்மைகள் தீக்காக்கை, காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

Thumb
ஆண்
Thumb
பெண்

மைனா அளவுள்ள தீக்காக்கை 30 செ.மீ. நீளம் இருக்கும், அதில் வாலின் நீளம் மட்டும் 16 செ.மீ இருக்கும். அலகு நீல நிறத்திலும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் ஊதா கலந்த நீல நிறத்தில் இருக்கும்.

ஆண் பறவையின் தலை, கழுத்து, மார்பு ஆகியன புகைக் கருபாக இருக்கும். முதுகு மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கைகள் வெள்ளைப் பட்டைகளோடு கூடிய கருப்பு நிறமாக இருக்கும். வயிறு இளஞ்சிவப்பு நிறம் மார்பின் கருப்பையும் வயிற்றின் சிவப்பையும் பிரிக்கும் வகையில் மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையே தெளிவான வெள்ளைப் பட்டை காணப்படும். வால் இறகுகளில் செம்பழுப்பு கறை காணலாம்.

பெண் பறவையின் தலை, கழுத்து ஆகியன மங்கிய கறுப்பு நிறமாக இருக்கும். வயிற்றின் நிறம் ஆரஞ்சு கலந்த பழுப்பாக இருக்கும். மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையே வெள்ளைப் பட்டை இராது.[3]

Remove ads

காணப்படும் பகுதிகள்

இந்தியாவில் கர்நாடகம், கேரளம், தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த காடுகளில் காணப்படுகின்றன. மலைகளில் 1500 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன.

நடத்தை

காடுகளில் மூங்கில் பதர்களிலும் பெரும்பாலும் காண இயலும். மரங்களை விட்டுத் தரைக்கு வரும் பழக்கம் இதற்கு கிடையாது. காலை மாலை நேரங்களில் சுறுசுறுப்பாக இரை தேடும். பிற நேரங்களில் மரக் கிளைகளில் தனித்து அமர்ந்திருக்கும்.

உணவு

கிளைகளிடையே தாவிப்பறந்து கம்பளிப் பூச்சி, வண்டு, வெட்டுக்கிளி, சில்வண்டு ஆகியவற்றை இரையாகப் பிடிக்கும். ம்யூவ் என்ற தனித்த குரல் ஒலிகொண்டு இது இருப்பதைத் தெரியலாம். முதுகுப் பக்கமே பார்ப்பவர்களுக்குத் தெரியும்படியாகக் கிளைகளில் அமரும் விசித்திரப் பழக்கம் உடையது. கிளைகளில் குப்புறத் தொங்கியபடியும் இலைக் கொத்துகளின் முன் இறக்கையடித்து பறந்தபடியும் பூச்சிகளைப் பிடிக்கும் பழக்கமும் உண்டு.

இனப்பெருக்கம்

இவை பிப்ரவரி முதல் மே முடிய இனப்பெருக்கம் செய்யும். முறிந்த, காய்ந்த மரங்களில் உள்ள பொந்துகளில் தரையிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் குச்சிகளால் சிறு மேடைபோல கூடு அமைக்கும். கூட்டில் 2 முதல் 4 முட்டைகள் இடும்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads