தீர்த்தம் (ஊர்)

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தீர்த்தம் (Theertham) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் தீர்த்தம், நாடு ...
Remove ads

பெயராய்வு

இந்த ஊரில் பழமையான தீர்த்தகிரீசுவரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகில் ஒரு நீரூற்று உள்ளது. கோயிலில் சிவனை வழிபட்டட பிறகு இந்த ஊற்று நீரை தீர்த்தமாக பக்தர்கள் குடிக்கின்றனர். இந்த தீர்த்தத்தினாலேயே இந்த ஊருக்கு தீர்த்தம் என்ற பெயர் உண்டானது.

இப்பகுதியில் கிடைத்த விஜயநகரப் பேரரசின் இரண்டாம் புக்க ராயன் காலத்திய (கி.பி. 1394, சகம் 1316) கல்வெட்டில் நிகரிலி சோழ மண்டலத்து விராவு நாட்டில் அமைந்த தீர்த்த புசவூர் என்னும் தீர்த்தம் என்று குறிப்பிடுகிறது.[2]

Remove ads

அமைவிடம்

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியிலிருந்து பேரிகை செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊர் வேப்பனப்பள்ளியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 274 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 515 குடும்பங்கள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2333 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1181, பெண்களின் எண்ணிக்கை 1152 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 49.5 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads