தீர்த்தவாரி உற்சவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீர்த்தவாரி உற்சவம் என்பது கோயில் திருவிழாவின் இறுதியில், குறிப்பாக பிரம்மோற்சவம், மாசி மகம் போன்ற விழாக்களின் இறுதி நாளில் அஸ்திர தேவர் எனப்படும் சுவாமியின் சூல வடிவிலான வெண்கலச் சிலையுடன் அர்ச்சகர்கள் கோயில் குளம், ஆறு அல்லது நீர் நிலைகளில் புனித நீராட்டுவதாகும். அவ்வமயம் கரையில் உற்சவரும், அம்பிகையும் சர்வ அலங்காரத்துடன் கரையில் மக்களுக்கு காட்சியளிப்பர்[1]. சில கோயில்களில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நன்னாளில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இது இந்து சமயக் கோயில் விழாக்களின் இறுதி நாளில் நடைபெறும் பாரம்பரிய சடங்காகும். இதன் மூலம் முற்பிறவி பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருவிழாவின் இறுதிநாளில் மட்டுமின்றி கிரகணம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை, அர்த்தோதயம்[2],. மகோதயம்[3]முதலிய புண்ணிய காலங்களிலும் தீர்த்தவாரி விழா கொண்டாடப்படுகிறது.

கும்பகோணத்தில் நடைபெறும் மகா மகத்தின் போது நடைபெறும் தீர்த்தவாரி உற்சவம் புகழ்பெற்றதாகும். அம்மன் கோயில்களில் ஆடி மாதம் தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது. திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில் தீர்த்த உற்சவம் சித்திரை மாதம் கொண்டாடப்படுகிறது.[4]பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயக சதுர்த்தி அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. [5]சித்திரா பௌர்ணமி அன்று மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகையில், பக்தர்கள் கள்ளழகர் மீது நீரைப் பீய்ச்சி அடித்து தீர்த்தாரி விழாவை சிறப்பிப்பது வழக்கம்.[6]கேரளாவில் தீர்த்தவாரி உற்சவத்தை ஆறாட்டு விழா என்பர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads