துத்தநாக அயோடைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துத்தநாக அயோடைடு (Zinc iodide) என்பது துத்தநாகமும் அயோடினும் சேர்ந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு ZnI2. நீரற்ற துத்தநாக அயோடைடு வெண்மை நிறத்திலும் சுற்றுச் சூழலில் உள்ள நீரை ஈர்த்துக் கொள்ளும் தன்மையும் கொண்டதாக உள்ளது. துத்தநாகம் மற்றும் அயோடின் ஆகியன மீள்கொதிக்கும் ஈதரின்[1] முன்னிலையில் அல்லது நீர்த்த கரைசலில் நேரடியாக வினைபுரிந்து [2] துத்தநாக அயோடைடை கொடுக்கின்றன.
- Zn + I2→ ZnI2
1150°C இல் துத்தநாக அயோடைடு ஆவி துத்தநாகம் மற்றும் அயோடினாக தனித்துப் பிரிகிறது. நீர்த்த கரைசலில் எண்முக Zn(H2O)62+, [ZnI(H2O)5]+ மற்றும் நான்முக ZnI2(H2O)2, ZnI3(H2O)− and ZnI42− முதலானவை கண்டறியப்பட்டுள்ளன[3].
படிக துத்தநாக அயோடைடின் மூலக்கூறு அமைப்பு வழக்கத்திற்கு மாறானது. வெள்ளை நிற துத்தநாக அணுக்கள் துத்தநாகக் குளோரைடில் உள்ளது போலவே நான்முக வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணைந்த நான்கு நான்முகிகள் குழு தங்களுக்குள் மூன்று முனைகளைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு நான்முகி அமைப்பை ஏற்படுத்துகின்றன. (Zn4I10) அவை தங்கள் முனைகள் மூலம் இணைந்து முப்பரிமாண வடிவம்[4] பெறுகிறது. இந்தச் சிறப்பு நான்முகி அமைப்பு பாஸ்பரசு பென்டொக்சைடு (P4O10) இன் அமைப்பைப் போலவே உள்ளது.[4] வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை முன்மொழிவின்படி துத்தநாகம் அயோடின் இவற்றிற்கிடையேயான பிணைப்பு நீளம் 238 pm[4] கொண்டு மூலக்கூறு துத்தநாக அயோடைடு நேர்கோட்டு அமைப்புடன் உள்ளது.
Remove ads
பயன்கள்
- தொழிற்துறை கதிரியக்க வரைவியலில் துத்தநாக அயோடைடு எக்ஸ் கதிர்கள் புகாத ஊடுறுவியாக முழுமை கெடாமல் சேதம் மற்றும் கலப்பு வேறுபாடுகளை அறிந்து மேம்படுத்துதலில் பயன்படுத்தப்படுகிறது[5][6].
- மீள மின்னேற்றம் செய்யத்தக்க நீர்த்த துத்தநாக ஆலசன் மின்கலத்தைப் பற்றி அமெரிக்க காப்புரிமை 4109065 [7] இவ்வாறு விவரிக்கிறது. இம் மின்கலத்தில் உள்ள மின்பகு கரைசலில் துத்தநாக உப்பு பயன்படுத்தப் படுகிறது. துத்தநாக் புரோமைடு, துத்தநாக அயோடைடு மற்றும் இவற்றின் கலவை இவற்றிலிருந்துதான் உப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. நேர்மின் முனை, எதிர்மின் முனை ஆகிய இரண்டு முனைகளிலும் இக்கரைசலே பயன்படுத்தப்படுகிறது.
- துத்தநாக அயோடைடு ஒசுமியம் நாலொட்சைட்டுடன் இணைந்து மின்னணு நுண்ணோக்கியியலில் துணைபுரியும் கறையாகப் பயன்படுகிறது[8]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads