துஷ்மந்த சமீர
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்திர வாசன் துஷ்மந்த சமீரா (Pathira Vasan Dushmantha Chameera, பிறப்பு: 11 சனவரி 1992) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.
வலக்கை நடுத்தர-விரைவுப் பந்து வீச்சாளரான இவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக 2015 சனவரி 29 இல் விளையாடினார்.[1] தனது முதலாவது ஓவரில் ரோஸ் டெய்லரை ஆட்டமிழக்கச் செய்தார். 2015 பெப்ரவரி 7 அன்று 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் பயிற்சியின் போது இலங்கை அணியின் தம்மிக பிரசாத் காயமடைந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக துஷ்மந்த சமீரா இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[2]
நீர்கொழும்பு மாரிசு ஸ்டெல்லா கல்லூரியில் கல்வி கற்ற இவர் உள்ளூரில் நோன்டிஸ்க்றிப்ட்சு அணியில் விளையாடுகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads