தென்னிந்தியக் கலாச்சாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னிந்தியக் கலாச்சாரம் அல்லது திராவிடக் கலாச்சாரம் அல்லது திராவிடப் பண்பாடு என்பது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய தென்னிந்தியா மாநிலங்கள் மற்றும் இலங்கை நாட்டில் தென்னிந்திய மற்றும் தமிழர்கள் வாழும் வட-கிழக்கு மாகாணங்களின் கலாச்சாரத்தைக் குறிப்பதாகும். தென்னிந்தியக் கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாகவும், வேறுபட்ட வடிவத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. தாய்மை மற்றும் உடலின் அழகைக் கொண்டாடுவதன் மூலமாக எல்லையற்ற அண்டத்தினைக் கொண்டாடுவதாக இக்கலாச்சாரம் இருக்கின்றது.[1][2][3][4][5] இக்கலாச்சாரம் அதனுடைய நடனம், உடை, சிற்பம் ஊடான எடுத்துக்காட்டுகள் மூலம் நிரூபணமாகின்றது[1][2][3][4][5]
Remove ads
பாரம்பரிய உடை
தென்னிந்திய பெண்கள் பாரம்பரியமாக புடவையையும் (சேலை), ஆண்கள் சாரனும் (சாரம்) அணிவர். இது வெள்ளை வேட்டியாகவோ அல்லது வண்ணமான தனித்துவமான பற்றிக்கு அலங்கரிப்பிலான லுங்கியாகவோ இருக்கும்.
உணவு
அரிசி முதன்மையான உணவு. கேரளா, கர்நாடகாவின் கடற்கறைப் பகுதிகள், மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் போன்ற இடங்களில் தேங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
இசை
நடனம்
பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கதக்களி, குச்சுப்பிடி போன்றவை தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடனங்கள்.
கட்டக்கலை
தஞ்சை பெரியக் கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள், பத்மநாபபுரம் அரண்மனை போன்றவை தென்னிந்தியர்களின் கட்டடக்கலைக்கு உதாரணங்கள்.
கல்வி
தமிழின் பழம்பெரும் காப்பியமான தொல்காப்பியம், தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி, மற்றும் உலக பொதுமறையாம் திருக்குறள் ஆகியவை தென்னிந்தியர்களின் கல்விப்புலமைக்கு உதாரணங்கள்.
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads