தே. கல்லுப்பட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தே.கல்லுப்பட்டி (ஆங்கிலம்:T.Kallupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் இருக்கும் 15 வார்டுகள் கொண்ட பேரூராட்சி ஆகும். தே.கல்லுப்பட்டியில் காந்தி நிகேதன் ஆசிரமம் உள்ளது. இது திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 4.5 சகிமீ பரப்பளவும், 34 தெருக்கள் கொண்ட தே. கல்லுப்பட்டி பேரூராட்சியின் மக்கள்தொகை 10,762 ஆகும்.தே.கல்லுப்பட்டி மதுரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[4]
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,762 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,403 ஆண்கள், 5,359 பெண்கள் ஆவார்கள். தே.கல்லுப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 992 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட குறைவானது. தே.கல்லுப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 84.48% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.50%, பெண்களின் கல்வியறிவு 80.40% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. தே.கல்லுப்பட்டி மக்கள் தொகையில் 1,015 (9.43%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 975 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமானதாக உள்ளது.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.50% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.23%, இஸ்லாமியர்கள் 1.08% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். தே.கல்லுப்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 10.04%, பழங்குடியினர் 0.06% ஆக உள்ளனர். தே.கல்லுப்பட்டியில் 2,774 வீடுகள் உள்ளன.[5]
Remove ads
இதனையும் காண்க
- காந்தி நிகேதன் ஆசிரமம் [6].[7][8] கோ. வேங்கடாசலபதி அவர்களால் 1940 இல் துவக்கப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads