தேடிவந்த ராசா
1995 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேடிவந்த ராசா (Thedi Vandha Raasa) என்பது 1995 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். பூபதி ராஜா இயக்கிய இப்படத்தை நளினி ராமராஜன் தயாரித்ததார். இப்படத்தில் ராமராஜன், குஷ்பூ,கவுண்டமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.[1][2][3]
Remove ads
கதை
தேவி (குஷ்பூ) தனது மனைவி என்றும் தங்களுக்குப் பிறந்தது என்று ஒரு குழந்தையுடன் ஆனந்த் (ராமராஜன்) சென்னைக்கு வருகிறார். தேவிக்கு குடைசலைத் தருகிறார். பின்னர் தேவிக்கு உண்மை தெரிய வருகிறது. கல்லூரியில் பயின்ற ஆனந்தின் சகோதரியின் மரணத்திற்கு தேவி தான் காரணம் என்று கருதும் ஆனந்த், தனது இன்னொரு சகோதரியின் குழந்தையை எடுத்துவந்து தங்கள் குழந்தை என்று கூறி தேவிக்கு பாடம் கற்பிப்பதற்காக வந்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே கதை
Remove ads
நடிகர்கள்
இசை
படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் புலமைப்பித்தன் மற்றும் கவிஞர் காமகோடியன் ஆகியோர் எழுதினர்.[4]
- "சின்னஞ் சிறு. . . " மலேசியா வாசுதேவன், உமா ராமணன்
- "எதையும் தங்கும். . . " மலேசியா வாசுதேவன்
- "நியாயம் கிடைக்காமல். . . " மனோ
- "ராசவே தேடி. . . " இளையராஜா, எஸ். என். சுரேந்தர் மற்றும் குழுவினர்
- "வம்பு பண்ணா. . . " மலேசியா வாசுதேவன்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads