நகரக் கல்லூரி, ஐதராபாத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நகரக் கல்லூரி, ஐதராபாத்து ( City College of Hyderabad ) என்பது இந்தியாவின் தெலங்காணாவில் ஐதராபாத்தில் அமைந்துள்ள இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான ஒரு தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகும். இந்த வளாகம் ஐதராபாத்திலுள்ள பழமையான பாரம்பரிய கட்டமைப்புகளில் ஒன்றாகும். [1][2] இந்தக் கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் 'பி ++' தரத்துடன் மீண்டும் அங்கீகாரம் பெற்றது. இதற்கு 2014 முதல் உசுமானியா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழு, தெலங்காணா அரசு ஆகியவை சுயாட்சி வழங்கியுள்ளது. இந்த கல்லூரி 2014-15 கல்வியாண்டிலிருந்து சிபிசிஎஸ் அங்கீகாரம் பெற்றது.
Remove ads
வரலாறு
ஐதராபாத்தைச் சேர்ந்த ஆறாம் நிசாம் மஹ்புப் அலி கான், 1865 ஆம் ஆண்டிலேயே "மதர்சா தார்-உல்-உலூம்" என்ற பெயரில் முதல் நகரப் பள்ளியை நிறுவினார். பின்னர் ஏழாம் நிசாம் உஸ்மான் அலிகான், இதை நகர உயர்நிலைப் பள்ளியாக மாற்றினார். பள்ளி 1921இல் தற்போதைய பிரமாண்டமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 30 மாணவர்களுடன் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் இடைநிலைப் பிரிவுகள் (எஃப்.ஏ) 1921 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியின் மேற்பார்வையின் கீழ் உருது மொழியுடன் கற்பிக்கும் ஊடகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1929ஆம் ஆண்டில், பள்ளி ஒரு கல்லூரியாக மேம்படுத்தப்பட்டு "சிட்டி கல்லூரி" என்று பெயரிடப்பட்டது. இது உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஒரு தொகுதி கல்லூரியாக மாறியது. இதன் தலைமை பொறியாளராக நவாப் கான் பகதூர் மிர்சா அக்பர் பேக் என்பவர் இருந்தார்.[1]
Remove ads
பாடத்திட்டம் மற்றும் பெயரின் மாற்றங்கள்
1956இல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இடைநிலை பாடநெறி (எஃப்.ஏ) ஒழிக்கப்பட்டதன் விளைவாக, பல்கலைக்கழகத்திற்கு முந்தைய பாடநெறி (பி.யூ.சி) அறிமுகப்படுத்தப்பட்டது. 1962ஆம் ஆண்டில் இளம் அறிவியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் இந்த நிறுவனம் "நகர அறிவியல் கல்லூரி" என்று பெயரிடப்பட்டது. சிட்டி கல்லூரி 1965ஆம் ஆண்டில் உசுமானியா பல்கலைக்கழகத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. மேலும், அரசு நகர அறிவியல் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. 1967ஆம் ஆண்டில், இளங்கலை, இளங்கலை வணிகவியல் ஆகிய படிப்புகள் சேர்க்கப்பட்டு கல்லூரி "அரசு நகரக் கல்லூரி" ஆனது. [3] கல்லூரி இளம் அறிவியல், இளங்கலை, இளங்கலை வணிகவியல் உள்ளிட்ட 22 இளங்கலைத் திட்டங்களை வழங்குகிறது.
Remove ads
முதுகலை ஆராய்ச்சி மையம்
2001 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் முறையே 100% வேலைவாய்ப்பு சாதனையுடன் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தில் அறிவியல் நிறைஞர் பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கல்லூரி ஒரு ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்பட்டது. இயற்பியல் மற்றும் வர்த்தகம் முறையே 2015 மற்றும் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டன.
கட்டிடக்கலை
1919ஆம் ஆண்டில் முன்னாள் ஐதராபாத் மாநிலத்தின் ஏழாம் நிசாம், உஸ்மான் அலி கானின், ஆட்சியின் போது அரசு நகரக் கல்லூரி நிறுவப்பட்டது. வளாகம் 16 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. மேலும், இந்தக் கட்டிடம் முசி ஆற்றங்கரையில் இந்தோ சரசனிக் பாணியில் திறந்த மைதானத்தை (இப்போது குலி குதுப் ஷா மைதானம்) எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்காணா உயர் நீதிமன்றம் கல்லூரியை ஒட்டியுள்ளது. [4] கல்லூரிக் கட்டிடம் தெலங்காணா அரசால் பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா திரைப்பட படப்பிடிப்பு மையமாகவ்ய்ம் இருந்து வருகிறது. [5]
Remove ads
குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்
- சிவ்ராஜ் பாட்டீல்
- பி.சிவ் சங்கர்
- மாரி சன்னா ரெட்டி
- அர்சாத் அயூப் [6]
- எம். பிரபாகர் ரெட்டி
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads