நகரத்தந்தை

நகரம் போன்ற நகராட்சிக்குரிய அரசாங்கத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நகரத் தந்தை (மேயர்; mayor, "பெரிய" எனப் பொருள்படும் இலத்தீன் மொழியின் மேயோரிலிருந்து (maior) பெறப்பட்டது) பல நாடுகளிலும் மாநகரம் அல்லது நகரம் போன்ற உள்ளாட்சி அரசின் மிக உயரிய அலுவலர் ஆவார். நகரக் கிழார், நகர பிதா, மாநகர முதல்வர் எனவும் அறியப்படுகின்றார்.

உலகளவில் மேயரின் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த உள்ளகச் சட்டங்கள் மற்றும் வழமைகளில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது நியமிக்கப்படுகிறார் என்பதும் வேறுபடுகின்றன. சிலவற்றில் மேயர் நகர அரசின் முதன்மை அதிகாரியாகவும் சிலவற்றில் பல்லுறுப்பினர் நகரவையின் தலைவராகவும் சிலவற்றில் ஒரு கௌரவப் பதவியாகவும் வரையறுக்கப்படுகின்றது. மேயர் நேரடியாகவோ அல்லது நகரசபை உறுப்பினர்களாலோ தேர்ந்தெடுக்கப்படலாம்.

ஜெர்மனி போன்ற கூட்டாட்சி குடியரசுகளில் மேயர் நகர அரசின் முதல்வராக உள்ளார். மாநில அரசின் முதல்வர் ஆட்சி புரிவதைப் போலவே மாநகர மேயரும் ஆட்சி புரிகின்றார். எனவே இவர் நகர முதல்வர் என்றும் அறியப்படுகின்றார். தோக்கியோ போன்ற பெரிய நகரங்களில் ஆளுநர் மேயராக உள்ளார்.

ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா போன்ற பல நாடுகளில் மேயர் நகரத்தின் தினசரிப் பணிகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இந்தப் பணியை டவுன் கிளார்க் அல்லது மாநகராட்சி ஆணையர் மேற்கொள்கிறார்; இது ஒரு முழுநேர ஊதியப் பணியாகும். மேயர், பெரும்பாலும் பகுதி நேரத்தில், வழக்கமாக ஊதியமின்றி பணியாற்றுகின்றார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் நகரத்தின் சார்பாளராக மேயர் பங்கேற்கிறார்.

Remove ads

இலங்கை

இலங்கையில் மாநகர சபையின் தலைவராக தேர்தலில் வெற்றிபெற்ற, பட்டியலில் முதலாவது பெயரைக் கொண்டவர் நகர முதல்வராக நியமிக்கப்படுவார். இரண்டாவது பெயரைக் கொண்டவர் துணை நகர முதல்வராக நியமிக்கப்படுவார்.[1]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads