நசியனூர்
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும் . From Wikipedia, the free encyclopedia
Remove ads
நசியனூர் (ஆங்கிலம்:Nasiyanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கி.மீ..; மேற்கில் கவுந்தப்பாடி 20 கி.மீ..; வடக்கில் பவானி 15 கி.மீ..; தெற்கில் பெருந்துறை 10 கி.மீ.. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
17.58 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 மக்கள்தொகையும் கொண்டது. [4]
அருகிலுள்ள இடங்கள்
பெருந்துறை, விஜயமங்கலம், இலட்சுமி நகர், பவானி, குமாரபாளையம், ஈரோடு, சென்னிமலை, மேட்டுக்கடை, திங்களூர், காஞ்சிக்கோயில், கவுந்தப்பாடி, ஈங்கூர், வீரப்பம்பாளையம், பழையபாளையம் ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads