நந்தினி (கதைமாந்தர்)
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தினி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்ட பழுவூர் இளையராணி ஆவாள்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
கதாபாத்திரத்தின் இயல்பு
நந்தினி வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்கிறாள். சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை தேவியையும், அருள்மொழிவர்மனையும், ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படுகிறாள்.
மதுராந்தகனுக்கு ஆசையூட்டுதல்
கண்டராதித்தரின் மகனான மதுராந்தத் தேவன், சிவ கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அரச பதவிகளில் நாட்டம் இன்றி இருந்தவரை நந்தினி சந்தித்து மன்னராகும் தகுதி மதுராந்தகனுக்கே உண்டு என்று மனம் மாற்றம் செய்கிறாள். அதனால் மதுராந்தகன் சிவ பக்தியை துறந்து நாடாள வேண்டி சிற்றரசர்களின் ரகசிய கூட்டத்தினைக் கூட்டுகிறான். அதில் மதுராந்தகன் கலந்து கொள்ள ஏதுவாக தன்னுடைய பல்லக்கினை தருகிறாள் நந்தினி.
சகோதரன்
நந்தினி தேவியின் அண்ணன் திருமலை. பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டரையரை நந்தினி திருமணம் செய்ததை திருமலை விரும்பவில்லை. அதன் பின் அவளை சந்திக்கவும் திருமலை பல நேரங்களில் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சோழப் பேரரசின் முதல் மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரின் முதன்மை ஒற்றனாக திருமலை வேலை செய்கிறார்.
Remove ads
ஆதித்த கரிகாலன் கொலை
வீரபாண்டியனின் கொலைக்காக ஆதித்த கரிகாலனை பழி வாங்குவதற்காக கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனை வரவைக்கின்றாள். அங்கே மணிமேகலைக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் திருமணம் செய்துவைக்கவே அழைத்திருப்பதாக ஏமாற்றுகிறாள். வேட்டை மண்டபத்திற்கு ஆதித்த கரிகாலனை அழைத்து வந்து கொலை செய்கிறாள். அதற்கு முன் மணிமேகலையையும், வந்தியத்தேவனை அங்கே ஒளிந்துகொள்ளும்படி செய்கிறாள். பெரிய பழுவேட்டரையர் ஆதித்தகரிகாலனை கொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்து தடுக்க முற்பட்டு மயக்கமிட்டு விழுகிறார். அவரை பாண்டிய ஆபத்துதவிகளை தூக்கிவர செய்து மூன்று நாட்கள் உணவளித்து மயக்கமாக இருந்தவரை தெளிவித்து அவரிடமிருந்து விடைபெற்று மறைந்துவிடுகிறாள்.
Remove ads
நூல்கள்
நந்தினியைக் கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
திரைப்படம்
மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திலூம், 2023 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் மந்தாகினி மற்றும் நந்தினி கதாப்பாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். [1]
இவற்றையும் பார்க்கவும்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads