நரநாராயண் சேது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரநாராயண் பாலம், இந்திய மாநிலமான அசாமில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இப்பாலமானது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. கீழடுக்கில் தண்டவாளமும், மேலடுக்கில் சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. இது 2284 மீற்றர் நீளத்தில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மூலம் பஙாய்காமோ மாவட்டத்தில் உள்ள யோகிகோபா என்ற ஊரில் இருந்து, கோவால்பாரா மாவட்டத்தில் உள்ள பஞ்சரத்னா என்ற ஊருக்கு சென்று திரும்ப முடியும். இதை 1998ஆம் ஆண்டின் ஏப்ரல் பதினைந்தாம் நாளில், அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் திறந்து வைத்தார். கட்டுமானப் பணிகளை பிரைத்வெய்டே, பர்ன் & ஜெசோப் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது. மொத்தமாக 301 கோடி ரூபாய் செலவானது.[1][2] பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரநாராயண் என்ற அரசரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
Remove ads
மேலும் பார்க்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads