நரவர்மன்

பரமார மன்னன் From Wikipedia, the free encyclopedia

நரவர்மன்
Remove ads

நரவர்மன் (Naravarman) (கி.பி. 1094-1133 ), நரவர்ம-தேவன் என்றும் அழைக்கப்படும் இவன், மத்திய இந்தியாவின் மால்வா பகுதியில் ஆட்சி செய்த பரமார வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னன். பல இராணுவ தோல்விகளின் விளைவாக, இவனது ஆட்சியின் போது பரமார சக்தி பெரிதும் வீழ்ச்சியடைந்தது.

விரைவான உண்மைகள் நரவர்மன், மால்வாவின் அரசன் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

நரவர்மன் பரமார மன்னன் உதயாதித்தனின் மகனாவான். பரமாரக் கல்வெட்டுகள் நரவர்மன் பற்றியும் இவனது சகோதரர் இலட்சுமதேவன் ஆகிய இருவரின் இராணுவ படையெடுப்பைப் பற்றியும் மானியங்களை பற்றியும் விவரிக்கின்றன. ஆனால் இலட்சுமதேவன் ஒருபோதும் அரியணை ஏறவில்லை. நரவர்மன் உதயாதித்தனுக்குப் பிறகு அரியணை ஏறியதாக தேவாஸ் மானியக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இலட்சுமதேவன் 1082க்கு முன்பே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, பொ.ச.1082 காமத் கல்வெட்டில் நரவர்மன் தனது சகோதரனின் நினைவாக வழங்கிய நில மானியத்தைப் பதிவுசெய்கிறது. [1]

Remove ads

கலாச்சார நடவடிக்கைகள்

Thumb
நரவர்மனின் நாணயம். லட்சுமி தேவி அமர்ந்த நிலையில் / தேவநாகரி எழுத்து முறை. [2]

நரவர்மன் ஒரு கவிஞராக இருந்தான். மேலும் பல்வேறு தெய்வங்களின் மீதான பாடல்களையும், தனது முன்னோர்களின் புகழ்ச்சிகளையும் இயற்றினான். நாக்பூர் பிரசஸ்தி இவரால் இயற்றப்பட்டிருக்கலாம். [3] இவன் உஜ்ஜையினியின் மகாகலேசுவரர் கோயிலை மீட்டெடுத்தான். மேலும் தெய்வத்தின் மேல் ஒரு பாடலை இயற்றினான். [4] இவன் விதிஷாவில் ஒரு கோயிலைக் கட்டத் தொடங்கினான். ஆனால் இராணுவத் தோல்விகளாலும், கிளர்ச்சிகளின் காரணமாக அதை முடிக்க முடியவில்லை. [5]

நரவர்மன் வெளியிட்ட தங்கம் (5.2 கிராம்), வெள்ளி (2.9 கிராம்), செம்பு நாணயங்கள் இந்தூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [6] [7]

ராஜதரங்கிணியின் கூற்றுப்படி, கிளர்ச்சியிலிருந்து தப்பிய காஷ்மீர் இளவரசர் பிக்சாச்சரனுக்கு நரவர்மன் அடைக்கலம் கொடுத்தான். இவன் பிக்சாசரனை தனது சொந்த மகனைப் போல வளர்த்தான். மேலும் ஆயுதங்கள் பற்றியும், அதைப் பயன்படுத்துவது பற்றியும் பயிற்சி அளித்தான். [8]

Remove ads

கல்வெட்டுகள்

நரவர்மனின் கல்வெட்டுகள் உதய்பூர் அருகிலுள்ள அமேரா (பொ.ச.1093-1095 ), தேவாஸ் (பொ.ச.1094 ), போஜ்பூர் (பொ.ச.1100-1101 ), நாக்பூர் (பொ.ச. 1104-05 ), விதிஷா (காலம் அறியப்படவில்லை) ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு கல்வெட்டு கடம்பபத்ரகாவில் (கி.பி. 1110) வெளியிடப்பட்டது. இது மும்பையில் வசிப்பவர் வசம் காணப்பட்டது. எச்.வி. திரிவேதி கடம்பபத்ரகாவை உஜ்ஜயினிக்கு அருகிலுள்ள தற்போதைய கம்லிகேடி (அல்லது கமலியாகேடி) கிராமத்துடன் அடையாளப்படுத்துகிறார். [9]

சான்றுகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads