நர்கர் விஷ்ணு காட்கில்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நர்கர் விஷ்ணு காட்கில்
Remove ads

நர்கர் விஷ்ணு காட்கில் (Narhar Vishnu Gadgil ) (பிறப்பு:1896 சனவரி 10 - இறப்பு: 1966 சனவரி 12) இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். இவர் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் எழுதினார். [1] இவரது மகன் விட்டல்ராவ் காட்கில் பின்னர் காங்கிரசு அமைச்சராகவும் கருத்தியலாளராகவும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

Thumb
இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் நர்கர் விஷ்ணு கட்கில், 1985
Thumb
மத்சய மாநில ஒன்றியத்தின் தொடக்கத்திற்காக பாரத்பூர் இரயில் நிலையத்தில் என்.வி.காட்கில் (மார்ச் 1948)

காட்கில் 1918 இல் புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டத்தில் பட்டம் பெற்றார்.

Remove ads

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய நடவடிக்கைகள்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், சுதந்திர போராட்ட வீரர்களான லோகமான்யா பால கங்காதர் திலக், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோரின் நடவடிக்கைகள் காட்கிலின் மேல் செல்வாக்கு செலுத்தின. ஆன்மீகத் தலைவர்கள் சுவாமி இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரும் இவர் மீது ஆதிக்கம் செலுத்தினர். சட்டப் பட்டம் பெற்ற உடனேயே இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, தேசிய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். இதனால் ஆளும் பிரிட்டிசு அரசாங்கத்தினால் எட்டு முறை சிறைவாசம் அனுபவித்தார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், காட்கில் பூனா மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும் (1921-25), மகாராட்டிரா காங்கிரசின் தலைவராகவும் (1937–45), காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் அதிகாரியாகவும் மற்றும் செயலாளராகவும் (1945–47) பணியாற்றினார். இவர் 1934 இல் மத்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காட்கில், 1930களில் மகாராட்டிராவில் சமூக சீர்திருத்த இயக்கங்களில் முன்னோடியாக இருந்தார் .

Remove ads

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான பணி

1947 மற்றும் 1952 க்கு இடையில் காட்கில் சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். பொதுப்பணித்துறை, வர்த்தகம் மற்றும் சுரங்கங்கள் மற்றும் சக்தி ஆகிய துறைகளை இவர் வகித்தார். மத்திய அமைச்சரவையில் தனது முதல் ஆண்டில், 1947 இந்திய-பாக்கித்தான் போரில் இந்தியாவின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காஷ்மீரில் ஜம்மு வழியாக பதான்கோட்டிலிருந்து சிறிநகர் வரை இராணுவத்திற்கான சாலையை அமைக்கும் திட்டத்தை இவர் தொடங்கினார். அமைச்சராக இருந்த இவர், பக்ரா, கோய்னா மற்றும் கிராகுந்த் அணைகள் தொடர்பான முக்கியமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கினார். அவர் 1952–55 காலகட்டத்தில் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

காட்கில் 1958 முதல் 1962 வரை பஞ்சாபின் ஆளுநராகவும், 1964 முதல் புனே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

இவர் புனேவின் சர்வசன சபை ,இயோங் ஆண்கள் சங்கம், புனே; மகாராட்டிரா இளைஞர் அமைப்பு, மும்பை; புனே மத்திய கூட்டுறவு வங்கி; மற்றும் புனே நகராட்சி போன்ற பல பொது சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். இவரது மகன் விட்டல்ராவ் காட்கில் காங்கிரசு கட்சியின் புனே மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மற்றொரு மகன் அனந்த் காட்கில் தற்போது மகாராட்டிரா காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்..

Remove ads

மரியாதை

இந்திய அஞ்சல் மற்றும் தந்தித் துறை 1985ஆம் ஆண்டில் காட்கிலின் நினைவாக ஒரு நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [1]

காட்கில் அரசியல், பொருளாதாரம், சட்டம் மற்றும் வரலாறு குறித்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார். 1962 ஆம் ஆண்டில் சாத்தாராவில் நடைபெற்ற மராத்தி இலக்கிய அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads