நர்மதாபுரம்

From Wikipedia, the free encyclopedia

நர்மதாபுரம்map
Remove ads

நர்மதாபுரம் (பழைய பெயர்:ஹோசங்காபாத்) மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மத்திய தெற்குப் பகுதியில் உள்ள நர்மதாபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இது நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. போபால் நகரத்திலிருந்து 77 கிலோ மீட்டர் தொலைவில் நர்மதாபுரம் நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் நர்மதாபுரம் பழைய பெயர்:ஹோசங்காபாத், நாடு ...
Remove ads

மாவட்டம் மற்றும் தலைமையிடம் பெயர் மாற்றம்

மத்திய பிரதேச அரசு ஹோசங்காபாத் மாவட்டம் மற்றும் ஹோசங்காபாத் நகரத்தின் பெயர்களை நர்மதாபுரம் மாவட்டம் என்றும், நர்மதாபுரம் என்று மாற்றியதற்கு பிப்ரவரி 2022ல் இந்திய அரசு ஒப்புதல் வழங்கியது.[1] [2]

வரலாறு

இந்நகரம் நர்மதை ஆற்றின் கரையில் இருந்ததால் இதற்கு நர்மதாபுரம் எனப்பெயர் பெற்றது. மால்வா இராச்சியத்தின் முதல் சுல்தான் ஹோசங் ஷா பெயரால் பின்னர் இந்நகத்திற்கு ஹோசங்காபாத் எனப்பெயர் மாற்றப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஹோசங்காபாத், மத்திய மாகாணத்தில் இருந்தது.[3]பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்நகரம் மத்திய பாரதம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மொழிவாரி மாகாணச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஹோசங்காபாத் மாவட்டம் இணைக்கப்பட்டது.

மார்ச், 2021-ஆம் ஆண்டில் ஹோசங்காபாத் நகரத்தின் பெயர் நர்மதாபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4][5]

Remove ads

பொருளாதாரம்

நர்மதாபுரத்தில் சோயா அவரை பெருமளவில் பயிரிடப்படுகிறது. பெரிய அளவில் முத்திரைத் தாள்கள் உற்பத்தி செய்யும் காகித ஆலைகள், அச்சுக் கூடங்கள் உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

இரயில் நிலையம்

புது தில்லி-சென்னை இருப்புப் பாதையில் ஹோசங்காபாத் இரயில் நிலையம் அமைந்துள்ளது.[6]

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், நர்மதாபுரம் (1981–2010, extremes 1901–2011), மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads