நல்லதே நடக்கும்
கே. சங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நல்லதே நடக்கும் 1993 ஆம் ஆண்டு சரவணன், காவேரி மற்றும் ரோகிணி ஆகியோர் நடிப்பில், கே. சங்கர் இயக்கத்தில், எம். ஜி. விகாஷ் மற்றும் எம். ஜி. வினோத் தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]
Remove ads
கதைச்சுருக்கம்
வழக்கறிஞரான பிரகாஷ் (சரவணன்) தன் தாயுடன் வசிக்கிறான். செய்யாத குற்றத்திற்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனையால் நிரபராதியான அவன் தந்தை இறந்ததால், தன் உதவியை நாடிவரும் அப்பாவி மக்களுக்கு வழக்கறிஞராகத் தன்னால் இயன்ற வழக்கு தொடர்பான உதவிகளை செய்கிறான்.
திருவிழாவில் கிராமத்தின் தலைவர் மேகநாதனைக் (சாத்தப்பன் நந்தகுமார்) கொலை செய்ததாக செங்கோடன் குற்றம் சாட்டப்படுகிறான். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் முதல் நாள் அன்று செங்கோடன் தான் நிரபராதி என்று அனைவர் முன்னிலையிலும் மன்றாடுகிறான். செங்கோடன்தான் குற்றவாளி என்று பிரகாஷ் முதலில் எண்ணினாலும், செங்கோடனின் தங்கையும் பிரகாஷின் காதலியுமான ஜீவா (காவேரி) பிரகாஷை சந்தித்து அவளது அண்ணன் நிரபராதி என்று புரியவைக்கிறாள். செங்கோடனைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பிரகாஷ் அதற்காக பல முயற்சிகள் செய்தாலும் இறுதியில் தோல்வி அடைகிறான். செங்கோடனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
செங்கோடனைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற ஆதாரங்களைத் தேடி செங்கோடனின் கிராமத்திற்குச் செல்கிறான். அவன் காதலி ஜீவா தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். அங்கு வள்ளியம்மாள் (மனோரமா) வீட்டில் தங்குகிறான். வள்ளியம்மாள் மகள் ஜெயா (ரோகிணி) அவனை விரும்புகிறாள். மேகநாதனின் சகோதரன் விக்ரமன் (நெப்போலியன்) மற்றும் மேகநாதனின் மனைவி ரமாதேவி (சில்க் ஸ்மிதா) ஆகியோர் மீது சந்தேகப்படுகிறான். செங்கோடன் காப்பாற்றப்பட்டானா? பிரகாஷ் வழக்கில் வெற்றி பெற்றானா? என்பது மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
- சரவணன் - பிரகாஷ்
- காவேரி - ஜீவா
- ரோகிணி - ஜெயா
- நெப்போலியன் - விக்ரமன்
- எம். என். நம்பியார்
- ஜனகராஜ் - ராமு
- செந்தில் - பூலோகம்
- சில்க் ஸ்மிதா - ரமாதேவி
- மனோரமா - வள்ளியம்மாள்
- பசி சத்யா - வைகுண்டம்
- அனுஜா - தையல்நாயகி
- பானுமதி - பிரகாஷின் தாய்
- சுமதி ஸ்ரீ - மங்களம்
- சாத்தப்பன் நந்தகுமார் - மேகநாதன்
- குமரிமுத்து - சிரிப்பு சிங்காரம்
- திடீர் கண்ணய்யா
- எல். ஐ. சி. நரசிம்மன்
- தில்லைராஜன்
- டி. கே. எஸ். நடராஜன்
- சண்முகசுந்தரி - அஞ்சலை
- சாமிக்கண்ணு
Remove ads
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் வாலி.[4][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads