நவாபாக்கு காந்தர்பல்
இந்தியாவின் காசுமீரில் உள்ள ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவாபாக்கு (Nawabagh Ganderbal) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றான காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள ஓர் அறிவிக்கப்பட்ட பகுதியும் கிராமமும் ஆகும். இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள், செர்ரி, பீச், ஆப்ரிகாட், அக்ரூட் பருப்புகள் மற்றும் பேரிக்காய் ஆகியவற்றின் உற்பத்திக்கு நவாபாக்கு பிரபலமான இடமாகும். அமெரிக்க ஆப்பிள், சுவையான ஆப்பிள், கோல்டன் ஆப்பிள், குலு சுவை ஆப்பிள், அமுர், ரெட் கோல்டு, இரசாக்கு வாரி மற்றும் மகாராசி போன்ற பல ஆப்பிள் வகைகள் இப்பகுதியில் விளைகின்றன. இப்பகுதியின் அஞ்சல் குறியீடு 193501. [5]
Remove ads
நிலவியல்
மும்பையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1619 மீ உயரத்தில் நவாபாக்கு அமைந்துள்ளது. [6] வகுரா, பட்வினா, இயசுனா, பாதாம்போரா, கான்புரா, மனசுபல், வசுகுரா, அகான், கர்பாக் மற்றும் கசூமா ஆகிய கிராமங்கள் நவாபாக்கு பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களாகும்.
மக்கள்தொகையியல்
இக்கிராமத்தில் சுமார் 800 எண்னிக்கைக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 85 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் தாய் மொழி காசுமீரியாகும். மக்கள் இந்தி/உருது மற்றும் ஆங்கிலத்தையும் பயன்படுத்துகின்றனர்.
கல்வி
- சேக்கு உல் ஆலம் பப்ளிக் பள்ளி (செயல்படாதது)
- அரசு நடுநிலைப்பள்ளி, நவாபாக்கு
- அரசு யுனானி மருத்துவக் கல்லூரி (இப்போது செயல்படும் - டாக்டர் சூனைத் நசீர் தாண்ட்ரூ உதவி பேராசிரியர் உடற்கூறியல் மூலம் திருத்தப்பட்டது)
மேலும் பார்க்க
- கங்கன்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
