காந்தர்பல் மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தர்பல் மாவட்டம் (Ganderbal District), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். காஷ்மீர் சமவெளியில் அமைந்த இம்மாவட்டம் 259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் காந்தர்பல் நகரமாகும். இம்மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத்தளமான சோன்மார்க் உள்ளது. ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை எண் 1 டி கந்தர்பல் நகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொவில் உள்ள பிராங் கிராமத்தை கடந்து செல்கிறது. இம்மாவட்டம் சிந்து பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
மாவட்ட எல்லைகள்
வடக்கில் பந்திபோரா மாவட்டம், கிழக்கில் கார்கில் மாவட்டம், தென்கிழக்கில் அனந்தநாக் மாவட்டம், தெற்கில் ஸ்ரீநகர் மாவட்டம், தென்மேற்கில் பாரமுல்லா மாவட்டம் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காந்தர்பல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 297,446 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 158,720 ஆகவும், பெண்கள் 138,726 ஆகவும் உள்ளனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,148 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 874 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 58.04 விழுக்காடாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 50,594 ஆக உள்ளனர். [1]
Remove ads
வரலாற்று மற்றும் தொல்லியல் களங்கள்
இந்து சமயத்தினருக்கான கீர் பவானி கோயில் மற்றும் நரநாக் கோயில்கள்[2]கந்தர்பல் மாவட்டத்தின் தொல்லியல் துறையிடம் உள்ளது.
புவியியல்

கந்தர்பல் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில், இமயமலையில் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சிந்து ஆறு காந்தர்பல் மாவட்டத்தின் குறுக்கே பாய்ந்து செல்கிறது.[3]
மாவட்ட நிர்வாகம்
காந்தர்பல், கங்கன், லர் மற்றும் வகுரா என நான்கு வருவாய் வட்டங்களும், கந்தர்பல், வகூரா, லர் மற்றும் கங்கன் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டுள்ளது.[4] ஊராட்சி ஒன்றியங்கள் பல கிராமப் பஞ்சாயத்துகளை கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் கங்கன் மற்றும் கந்தர்பல் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.[5]
தட்ப வெப்பம்
காஷ்மீர் சமவெளியில் அமைந்த காந்தர்பல் மாவட்டம் சூன், சூலை மற்றும் ஆகஸ்டு மாதம் தவிர பிற மாதங்களில் குளிர் காணப்படுகிறது.
சுற்றுலா
சோனாமார்க்

சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும், உலகப் புகழ் பெற்ற சோன்மார்க் மலை வாழிடம், ஸ்ரீநகரிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் நல்லா சிந்து ஆற்றாங்கரை மீது அமைந்துள்ளது. இங்குள்ள பனிக்கட்டிகள் படர்ந்த விசன்சர், கிருஷ்ணன்சர், காட்சர் மற்றும் கங்காபல் ஏரிகளில் பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் படகு விடும் போட்டிகள் நடைபெறுகிறது. இங்குள்ள உயரமான பனி படர்ந்த மலைகளில் மலையேற்றப் பயிற்சி தரப்படுகிறது.
மனஸ்பல் ஏரி
காந்தர்பல் மாவட்டத்தின் வடமேற்கே 12 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்த, ஐந்து கிலோ மீட்டர் நீளமும், ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மனஸ்பல் ஏரி, சோனாமார்க் ஏரியை போன்றே சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகும்.[6]
Remove ads
இதனையும் காண்க
படக்காட்சியகம்
- காந்தர்பல் ஆப்பிள் பழங்கள்
- ஆப்பிள் ஏற்றுமதி
- நவாபாக் ஆப்பிள்கள்
- நவாபாக் ஆப்பிள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads