நாம் மூவர்

From Wikipedia, the free encyclopedia

நாம் மூவர்
Remove ads

நாம் மூவர் (Naam Moovar) என்பது 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை ஜம்பு என்கிற ஜம்புலிங்கம் இயக்கினார்[3] இப்படத்திற்கான கதையை மகேந்திரன் எழுத, உரையாடலை முல்லை சக்தி எழுதினார். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில நடித்தனர். எல். விஜயலட்சுமி ரத்னா, வி. கே. ராமசாமி, பண்டரிபாய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனனர். இந்தத் திரைப்படம் 1966 ஆகத்து 5 அன்று வெளியானது.[4] வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[5]

விரைவான உண்மைகள் நாம் மூவர், இயக்கம் ...
Remove ads

கதை

நாகேசின் தாயாரான பண்டரிபாய் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரையும் வளர்க்கிறார். பண்டரிபாயின் இறப்புக்குப் பிறகு மூவரும் பிரிக்ன்றனர். ரவிச்சந்திரன் கவல் துறையில் அதிகாரியாகிறார். அவர் ரத்தினாவைக் காதலிக்கிறார். நாகேஷ் ஓவியராகிறார். அவர் மாதவியைக் காதலிக்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரனை ஒரு கும்பல் கடத்துகிறது. அவர்களிடம் இருந்து ரவிச்சந்திரனை ஜெய்சங்கர் காப்பாற்றுகிறார். இதன் பிறகு பிரிந்த மூவரும் எப்படி மீண்டும் ஒன்று சேந்தனர் என்பதே கதையாகும்.

Remove ads

நடிப்பு

தயாரிப்பு

மகேந்திரன் கதை எழுதிய முதல் படம் நாம் மூவர் ஆகும்.[6] எம். ஜி. ராமச்சந்திரனின் நண்பரான கே. ஆர். பாலன், மகேந்திரனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு, பி. மாதவனை இயக்குநராகக் கொண்டு ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். இருப்பினும், நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்த நிலையில், மாதவன் அத்தகைய வித்தியாசமான, யதார்த்தமான கதைக்களத்தை இயக்க முடியாமல் படத்தை விட்டு வெளியேறினார். இதனால் மகேந்திரன் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி யாருக்கும் தெரிவிக்காமல் தனது சொந்த ஊருக்குச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு, பாலன் மகேந்திரனை சென்னைக்குத் திரும்புமாறு ஒரு கடிதம் எழுதினார்; கதையில் மேலும் வணிகக் கூறுகளைச் சேர்க்குமாறு மகேந்திரனை வற்புறுத்தினார். அதற்கு மகேந்திரன் ஒப்புக்கொண்டார். படத்தொகுப்பாளர் ஜம்பு என்ற ஜம்புலிங்கத்தை படத்தை இயக்கும்படி செய்தார்.[7]

இசை

இப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[8] "பிறந்த நாள் இன்று" என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இலங்கை வானொலியில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது.[9]

மேலதிகத் தகவல்கள் பாடல், வரிகள் ...
Remove ads

வெளியீடும் வரவேற்பும்

நாம் மூவர் 1966 ஆகத்து 5 அன்று வெளியானது.[10] கல்கி இதழ் படத்திற்கு கலவையான விமர்சனங்களை அளித்தது. ஆனால் நாகேஷ், ரவிச்சந்திரன், ஜெய்சங்கரின் நடிப்பைப் பாராட்டியது.[11] இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[7]

நூல்

  • Mahendran (2013) [2004]. சினிமாவும் நானும் [Cinema and I]. Karpagam Publications. கணினி நூலகம் 54777094.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads