நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் (Dnipropetrovsk Oblast), உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் நிப்ரோ நகரம் ஆகும். இது உக்ரைனின் முக்கிய தொழில் துறை மாகாணம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 31,42,035 ஆகும். பரப்பளவில் இம்மாகாணம் உக்ரைன் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் முக்கிய நகரங்கள் நிப்ரோ, கிரிவோய் ரோக், கமியன்ஸ்கே மற்றும் நிகோபோல் ஆகும். தினேப்பர் ஆறு இம்மாகாணத்தின் ஊடாகப் பாய்கிறது.
2019-ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இம்மாகாணத்தின் பெயரை சிசெஸ்லாவ் மாகாணம் எனப்பெயர் மாற்றம் செய்ததது[4]
Remove ads
புவியியல்
31,974 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. தினேப்பர் ஆறு இம்மாகாணத்தின் ஊடாகப் பாய்கிறது. இதன் வடக்கில் [[[போல்தாவா மாகாணம்]], கிழக்கில் தோனெத்ஸ்க் மாகாணம், தெற்கில் சப்போரியா மாகாணம் மற்றும் கெர்சன் மாகாணம் மற்றும் மேற்கில் மைக்கோலைவ் மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தில் இரும்பு மற்றும் பிற உலோக கனிமங்கள் அதிகம் உள்ளது.
Remove ads
மாகாண நிர்வாகப் பிரிவுகள்

இம்மாகாணம் 22 மாவட்டங்களையும், 20 நகரங்களையும், 46 நகர்புற குடியிருப்புகளையும், 1369 கிராமங்களையும் கொண்டது.
மக்கள் தொகை பரம்ப்பல்

இம்மாகாணத்தின் மக்கள் தொகையில் கீழ்கண்டவாறு மக்கள் உள்ளனர்.
உக்ரேனியர்கள் – 79.3%,
உருசியர்கள் – 17.6%,
பெலேரஷ்யர்கள் – 0.8%,
- யூதர்கள் – 0.4%,
ஆர்மீனியர்கள் – 0.3%,
அசர்பைஜானியர்கள் – 0.2%,
மால்டோவினியர்கள் – 0.12%,
ரோமாணி மக்கள் – 0.11%,
- தாதர்கள் – 0.11%,
ஜெர்மனியர்கள் – 0.11%,
- பிறர் – 0.95%;
இம்மாகாணத்தில் உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் 47.5%, உக்ரைனிய மரபுவழி கீவ்வியன் திருச்சபையினர் 10.7%, உரோமைக் கத்தோலிக்கர்கள் 1.3%, உக்ரைனிய மரபுவழி தன்னாட்சி திருச்சபையினர் 0.8%, புரோட்டஸ்டண்ட் சபையினர் 32.3% அக உள்ளனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads