நீர் விளையாட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிலத்தில் விளையாடுவது போல் மக்கள் நீரிலும் விளையாடி மகிழ்ந்தனர். சங்ககாலத் தமிழர் கடல் நீரில் விளையாடிய பின் அவர்கள் ஆற்று நீரில் விளையாடி உடம்பிலுள்ள உப்புப் படிவைத் தூய்மை செய்துகொண்டனர்.[1]
அலவன் ஆட்டல், ஓரை, தைநீராடல், நீச்சல் நடனம், பண்ணை, புணை, புனலாடல், மூழ்கல், வண்டற்பாவை முதலான விளையாட்டுகள் சங்ககாலத் தமிழர் நீரிலும், ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள்.
பரிபாடல் நூலில் வையை பற்றிய பாடல்கள் [2] அனைத்தும் புனலாடல் விளையாட்டைப் பற்றியவை. இவற்றில் கூறப்பட்டுள்ள நீர் விளையாட்டுப் பொருள்கள் பல.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads