பஞ்சாரா ஹில்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) என்பது தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் நகர்ப்புற வணிக மையமாகும். மேலும், இது இந்தியாவின் மிகவும் வசதியான சுற்றுப்புறங்களில் ஒன்றாகும். இது ஜூபிளி ஹில்ஸுக்கு நெருக்கமான ஒரு சந்தைப் பகுதியாகவும் இருக்கிறது. இந்த பகுதி ஒரு மலைப்பாங்கான காடாக இருந்தது. கடந்த காலத்தில் குறைவான மக்களே இங்கு வசித்து வந்தனர். நிசாமின் வம்சத்தின் சில அரச வம்சத்தினர் மட்டுமே இங்கு வாழ்ந்தனர். இது அவர்களுக்கு வேட்டையாடும் இடமாக இருந்தது. அதன் வரலாறு மற்றும் அந்தஸ்துடன் கூட, இந்த பகுதி இப்போது முற்றிலும் நகர்ப்புற வணிக மையமாக மாற்றப்பட்டுள்ளது. இது உயர்நிலை தங்கும் விடுதிகள், உணவகங்கள், இரவு விடுதிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பஞ்சாரா ஹில்ஸ் அதன் சாலை எண்களால் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாலையும் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன: எண்கள் 1 இலிருந்து தொடங்கி 14 இல் முடிவடையும்.
தி எகனாமிக் டைம்ஸ் என்ற பத்திரிகையின் கூற்றுப்படி [1] இப்பகுதி இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த பகுதியின் குறியீடாகக் கருதப்படுகிறது. மேலும் ஜூபிலி ஹில்ஸுடன் சேர்ந்து, ஐதராபாத்து பகுதியில் வசிக்கத்தக்க மிகவும் மதிப்புமிக்க பெருநகர / நகரமாகும். இப்பகுதியின் சொத்துக்கள் "செப்டம்பர் 96, 2011 நிலவரப்படி 20.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான ரூ. 96,000 கோடி" என்று எகனாமிக் டைம்ஸ் மதிப்பிட்டுள்ளது.
மிகவும் புறக்கணிக்கப்பட்ட பஞ்சாரா ஏரியும் இங்கு அமைந்துள்ளது.
1927 ஆம் ஆண்டில் ஐதராபாத்தின் கடைசி நிசாமின் அரசவையில் இருந்த மந்திரி நவாப் மெகுதி நவாசு ஜங் என்பவர் இந்த நிலத்தை முதன்முதலில் வாங்கினார். அவர் 'பஞ்சாரா பவன்' ( அந்தோனி கோடியின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது) என்ற தனது இல்லத்தை இங்கு கட்டினார். கடைசி நிசாம் அதன் வளர்ச்சிக்கு பொறுப்பான நபராக நவாபின் பெயரை வைக்க பரிந்துரைத்தார். இருப்பினும், நவாப் அதன் அசல் குடியிருப்பாளர்களான பஞ்சாரா என்ற பெயரிலேயே குறிப்பிடுவது நியாயமானது என்று கூறினார். [2]
பஞ்சாரா பவனை ஜவகர்லால் நேருவும், அப்பகுதியால் ஈர்க்கப்பட்டு ஒரு கவிதை எழுதிய இரவீந்திரநாத் தாகூரும் பார்வையிட்டுள்ளனர். [3] [4]
பஞ்சாரா ஹில்ஸின் சாலை எண் 1 இப்போது மெகுதி நவாசு ஜங் சாலை என்று அழைக்கப்படுகிறது. இது அவரது நினைவாக பெயரிடப்பட்டது. [5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads