பண்டாரிகுளம்
இலங்கை வட மாகாண மாவட்டம் வவுனியாவில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டாரிகுளம் (வவுனியா-03 அல்லது அதிகாரப்பூர்வ பெயர் 214E), (தமிழ்: பண்டாரிகுளம், ரோமானியம்: Paṇṭārikuḷam; சிங்களம்:පණ්ඩාරිකුලම් , ரோமானியம்: Paṇḍārikulam) என்பது இலங்கையின் வடக்கே உள்ள வவுனியாவின் புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
வவுனியாவைச் சூழ்ந்துள்ள பல கிராமங்களில் பண்டாரிகுளமும் ஒன்று, அவை விரிவடைந்து நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.பண்டாரிகுளம் வவுனியாவின் மையத்தில் இருந்து 1 km (0.62 mi) தொலைவில் அமைந்துள்ளது.
Remove ads
சொற்பிறப்பியல்
இப்பகுதியில் கருங்காலி மரங்கள் இருந்ததால் கருங்காலியடித்தோட்டம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமம் வன்னிய மன்னர்கள் காலத்தில் சைவக் கோயில்களில் மாலைகள் கட்டி வழிபடும் "பண்டாரம்" குடிமக்களுக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. மாவீரன் பண்டரவன்னியனின் பெயரால் பண்டாரக்குளம் "பண்டாரிகுளம்" எனப் பெயர் மாற்றம் பெற்றதாக வவுனியா வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
அமைவிடம்
இப்பகுதி வவுனியாவில் இருந்து ஓரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கே வவுனியா, மேற்கே உக்குளாங்குளம் , வடக்கே குருமன்காடு மற்றும் தெற்கே தோணிக்கல் அமைந்துள்ளது.[4]

வரலாறு
1803 இல் மன்னர் பண்டார வன்னியனின் மரணத்திற்குப் பிறகு, இந்த இடம் கண்டி இராச்சியத்தின் கீழ் வந்தது. அதன் பிறகு 1815இல் கண்டி ராசதானி பிரித்தானிய பேரரசு வசமானதால் அதன் பிறகு பிரித்தானிய இலங்கையின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1980 களின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்ளநாட்டு போர் காரணமாக யாழ்பாண நகரில் இருந்து வெளியேறிய மக்கள் இங்கு வாழந்த வன்னி மக்களுடன் குடியேறினர்.

வரலாற்று தலங்கள்
பண்டாரிகுளம் முத்துமாரி அம்மன் கோவில் என்பது பண்டாரிகுளத்தில் உள்ள ஒரு இந்து ஆலயமாகும். இந்த கோவில் கி.பி 1522 இல் கட்டப்பட்டது. இது வவுனியா மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய அம்மன் கோயிலாகும்.
மேலும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தரும் தொடருந்துகளை குளிர்விக்க நீர் எடுக்கும் குளமாக இது பயன்பட்டமையால் அச்சின்னங்கள் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.
Remove ads
கல்வி நிறுவனங்கள்
- விபுலானந்தாக் கல்லூரி
- கணித நிலையம்
- EDI
- CBI
- லிங்கன் ஆங்கில அகடமி
போக்குவரத்து
- வவுனியா புகையிரத நிலையம்
- வவுனியா பழைய பேருந்து தரிப்பிடம்
- வவுனியா புதிய பேருந்து தரிப்பிடம்
- வவுனியா விமான நிலையம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads