பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம். From Wikipedia, the free encyclopedia

பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்map
Remove ads

பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Tun Razak LRT Station; மலாய்: Stesen LRT Bandar Tun Razak; சீனம்: 敦拉萨镇) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]

விரைவான உண்மைகள் SP14 பண்டார் துன் ரசாக், பொது தகவல்கள் ...

கோலாலம்பூர் மாநகரத்தின் அருகிலுள்ள பண்டார் துன் ரசாக் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் இந்த நிலையம் மூலியா நிலையம் (Mulia Station) என்று அழைக்கப்பட்டது.[3]

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சான் சோவ் லின் நிலையம் தொடங்கி செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் வரையில் 7 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செராஸ் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது.[4]

Remove ads

பண்டார் துன் ரசாக்

பண்டார் துன் ரசாக் (Bandar Tun Razak) என்பது கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள புறநகரம். உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகவும் இயங்குகிறது.

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக்கில், கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டரங்கம் (Kuala Lumpur Football Stadium); ஈருருளி சுற்றரங்கம்; துவாங்கு முகிரிஸ் மருத்துவமனை (Hospital Universiti Kebangsaan Malaysia); கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தின் கிளை அலுவலகம் போன்ற வசதிகள் உள்ளன.[5][6]

Remove ads

வரலாறு

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி என அழைக்கப்பட்டன.

இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

பிரசரானா மலேசியா

பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.

எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும்.

எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது.

காட்சியகம்

பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads