பண்டார் பூச்சோங்
பூச்சோங் நகர மையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டார் பூச்சோங் அல்லது பூச்சோங் நகர மையம், (மலாய்: Pusat Bandar Puchong; ஆங்கிலம்: Puchong Town Centre; சீனம்: 蒲种再也); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் பெருநகர்ப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புறநகரம் ஆகும்.[1]
இந்த மையம் ஐ.ஓ.ஐ. பேரங்காடி (IOI Mall), பூச்சோங் ஜெயா (Puchong Jaya) மற்றும் கின்ராரா நகரத்திற்கு (Bandar Kinrara) அருகில் அமைந்துள்ளது.
பூச்சோங் நகர மையத்தின் வடக்கில் சுபாங் ஜெயா மாநகரம், கின்ராரா நகரம்; தெற்கில் புத்ராஜெயா நகரம்; சிப்பாங் நகரம்; கிழக்கில் செர்டாங் நகரம்; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய நகர்ப் புறங்கள் உள்ளன.
Remove ads
பொது
1960 - 1970-ஆம் ஆண்டுகளில் இருந்த பூச்சோங் நகரம் தான், இப்போது பண்டார் பூச்சோங் நகர மையம் என்று பெயர் மாற்றம் அடைந்து உள்ளது. பூச்சோங் நகரத்திற்கு அருகாமையில் உருவான நகர்ப் புறங்களின் வளர்ச்சியினாலும்; சுபாங் ஜெயா புறநகர் வளர்ச்சியினாலும்; பண்டார் பூச்சோங் எனும் ஒரு பெரு நகரம் உருவானது.
கடந்த 30 ஆண்டுகளில் பழைய பூச்சோங் நகரத்தைச் சுற்றிலும் பல புதிய நகர்ப் புறங்கள் தோன்றின. அதனால் பழைய பூச்சோங் நகரத்திற்கு பண்டார் பூச்சோங் என தனித்துப் பெயர் வைக்கப்பட்டது.
1970-ஆம் ஆண்டுகளில் பூச்சோங் நகரின் உள்கட்டமைப்பு பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கியது. இப்போது மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பல தொழில் துறை மண்டலங்கள், வணிக மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உருவாகி உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் நகரமயமாக்கல் துரிதமான வளர்ச்சி கண்டு உள்ளது.[2]
சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம்
பூச்சோங் நகர மையம்; சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
பெட்டாலிங் மாவட்டத்தில் இருக்கும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (Subang Jaya City Council) நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர இடங்கள்:
- கின்ராரா (Kinrara)
- தாமான் பூச்சோங் உத்தாமா (Taman Puchong Utama)
- தாமான் சௌஜானா பூச்சோங் (Taman Saujana Puchong)
- பூச்சோங் பிரிமா (Puchong Prima)
- பூச்சோங் ஜெயா (Puchong Jaya)
- புக்கிட் பூச்சோங் 1 (Bukit Puchong 1)
- பண்டார் பூச்சோங் (Bandar Puchong)
- பண்டார் புத்திரி பூச்சோங் (Bandar Puteri Puchong)
- பூச்சோங் பெர்மாய் (Puchong Permai)
பூச்சோங் நகர மையத்தின் (Pusat Bandar Puchong) பெரும்பகுதி சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அதிகார எல்லைக்குள் அமைந்து உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads