பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் அல்லது பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pusat Bandar Puchong LRT Station; மலாய்: Stesen LRT Pusat Bandar Puchong; சீனம்: 蒲種市中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் ஜெயா, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
Remove ads
பொது
2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.[5][6]
11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாகக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.
Remove ads
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக SP26 பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
கோலாலம்பூருக்கு தெற்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள இந்த நிலையத்திற்கு அருகில் தெஸ்கோ பேரங்காடி (Tesco Puchong) உள்ளது. டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் மீது ஒரு பாதசாரி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம், தாமான் வாவாசான் பூச்சோங் (Taman Wawasan Puchong) மற்றும் பண்டார் புத்திரி பூச்சோங்கின் (Bandar Puteri Puchong) குடியிருப்புகளுக்கு சேவை செய்கிறது. பூச்சோங் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
Remove ads
கட்டுமானம்
செரி பெட்டாலிங் வடத்தடத்திற்கான நீட்டிப்புத் திட்டம் 2006-இல் முன்மொழியப்பட்டது. 2011-இல் கட்டுமானம் தொடங்கியது. RM 955.84 ரிங்கிட் மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம்[7] ஜார்ஜ் கென்ட் (எம்) நிறுவனம் (George Kent (M) Bhd); மற்றும் லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd);[8] ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.
2012-இல். திட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன[9]. ஆனாலும், மேலும் 3 நிலையங்களுடன் இந்த நிலையம் 2016 மார்ச் 31-இல் திறக்கப்பட்டது.[10][11]
கட்டிடக்கலை
பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.[12]
நுழைவாயில்கள்
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் மொத்தம் இரண்டு நுழைவாயில்கள் / வெளியேறு வாயில்கள் உள்ளன
நிலைய அமைப்பு
P | பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும் ![]() | |
நடைபாதை 1 செரி பெட்டாலிங் | → ![]() | |
நடைபாதை 2 செரி பெட்டாலிங் | ← ![]() | |
பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும் ![]() | ||
C | ஒருங்கிணைவு நிலை | பயணச்சீட்டு தானியங்கி, தானியங்கி கட்டணக் கடவுகள், வாடிக்கையாளர் சேவை நிலையம், பாதசாரி பாலம் ![]() |
G | தெருநிலை | தரிப்பிடம், பேருந்து நிறுத்தம், பேருந்து தகவல் நிலையம், பல்பொருள் விற்பனைக் கடை ![]() |
* ![]() |
Remove ads
சேவைகள்
ஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.
Remove ads
பேருந்து சேவைகள்
Remove ads
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2011 - 2019)
- 2017
- 2011
- 2011
- 2011
- 2019
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads