பதார் பள்ளிவாசல்
இந்தியப் பள்ளிவாசல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதார் பள்ளிவாசல் (Pathar Mosque) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள பழைய நகரமான சிறீநகரில் அமைந்துள்ளது. உள்ளூரில் இதை நேவ்மசீத் என்று அழைக்கிறார்கள்.இப்பள்ளிவாசல் முகலாயர் காலத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. சீலம் ஆற்றின் இடது கரையில் காங்கா-இ-மௌலா சன்னதிக்கு எதிரே[1] அமைந்துள்ள இப்பதார் பள்ளிவாசலை பேரரசர் சகாங்கீரின் மனைவியான முகலாய பேரரசி நூர் சகான் 1623 ஆம் ஆண்டில் கட்டினார்.[2]
காசுமீர் பள்ளத்தாக்கிலுள்ள மற்ற பள்ளிவாசல்களிலிருந்து வேறுபட்ட சில தனித்துவமான அம்சங்கள் பதார் பள்ளிவாசலில் உள்ளன. மற்ற பள்ளிவாசல்களைப் போல, இதற்கு பாரம்பரிய பிரமிடு கூரை இல்லை.மேலும் இங்கு ஒன்பது அலங்கார வளைவுகள் உள்ளன. மையமான வளைவு மற்ற வளைவுகளைவிட பெரியதாகும்.[3][4] பள்ளிவாசல் அழகான தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads