பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம்map
Remove ads


பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் (Parangipettai railway station) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் பரங்கிப்பேட்டையில் தொடருந்து போக்குவரத்து சிறப்பாக இருந்தது . போக்குவரத்து வசதிகள் நவீனமயமாக்கப்பட்ட பிறகு, பரங்கிப்பேட்டை மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தது. இந்த நிலையத்தை தெற்கு இரயில்வே 2017 இல் NSG-6 என வகைப்படுத்தியது.[5] இப்போது, ​​2023 இல் HG-2 என வகைப்படுத்தியுள்ளது.[6]

விரைவான உண்மைகள் பரங்கிப்பேட்டை - PO, பொது தகவல்கள் ...

அகலப்பாதையாக மாற்றப்பட்ட பிறகு, விழுப்புரம், மயிலாடுதுறை செல்லும் 6 தொடருந்துகள், பெங்களூரு - காரைக்கால் இடையே மேலும் இரண்டு ரயில்கள் என மொத்தம் 8 தொடருந்துகள் மட்டுமே பரங்கிப்பேட்டையில் நின்று செல்கின்றன. பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் 60+ விரைவு வண்டிகள் எதுவும் இங்கு நிற்பதில்லை.

பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் கடலூரிலிருந்து 17 மைல் தொலைவிலும், மாயவரத்திலிருந்து (மயிலாடுதுறை) 29 1/2 தொலைவிலும், சென்னையிலிருந்து (எழும்பூர்) 145 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. பரங்கிப்பேட்டை நகரம் தொடருந்து நிலையத்தின் கிழக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது.

Remove ads

புத்தகங்கள்

தென்னிந்திய இரயில்வே நிறுவனம் 1900, 1903, 1909, 1926 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தென்னிந்திய இரயில்வே விளக்க வழிகாட்டி என்ற நூலில் பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் பற்றிய தகவல்களை 1900 இல் ஒன்றரைப் பக்கங்களில் வழங்கியுள்ளது.

பழைய கட்டிடத்தின் எச்சங்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads