பரப்பிரம்ம உபநிடதம்

ஆன்மீகம், துறவு வாழ்க்கை, துறவு பற்றிய இந்து நூல் From Wikipedia, the free encyclopedia

பரப்பிரம்ம உபநிடதம்
Remove ads

பரப்பிரம்ம உபநிடதம் (Parabrahma Upanishad) ( சமக்கிருதம்: परब्रह्म उपनिषत्) சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து மதத்தின் இடைக்கால சிறு உபநிடதங்களில் ஒன்றாகும்.[4][5] இந்த உரை அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] மேலும், 20 சந்நியாச (துறவு) உபநிடதங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

விரைவான உண்மைகள் பரப்பிரம்ம உபநிடதம், தேவநாகரி ...

பரப்பிரம்ம உபநிடதம் முதன்மையாக இல்லறத்தில் ஈடுபடுபடுபவர்கள் அணியும் புனித நூல், முடி, முடியின் பாரம்பரியத்தை விவரிக்கிறது. இந்து ஆசிரம அமைப்பில் துறவற வாழ்க்கை முறையைத் துறந்த பிறகு இருவரும் ஏன் சந்நியாசியால் கைவிடப்படுகின்றனர் என்பதைப் பேசுகிறது. [6] துறப்பவர்களுக்கு ஆடை முக்கியமல்ல என்றும், அறிவே அவர்களின் உண்மையான தலைமுடி என்றும் உரை வலியுறுத்துகிறது. [6] இவ்வாறு அலைந்து திரியும் துறவிகள், பிரம்மத்தை "முழு பிரபஞ்சமும் ஒரு சரத்தில் முத்துக்கள் போல கட்டப்பட்டிருக்கும் உச்ச சரம்" என்று கருதுகின்றனர் என பேட்ரிக் ஆலிவெல் கூறுகிறார். [7] [8] இந்த இடைக்கால உரையில் உள்ள ஆன்மா-பிரம்மத்துக்கு ஈடாக, அறிவு மற்றும் வெளிப்புற ஆடை மற்றும் சடங்குகளை கைவிடுதல் ஆகியவை பண்டைய உபநிடதங்களில் உள்ளதைப் போலவே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.[9]

Remove ads

உள்ளடக்கம்

இல்லறத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சந்நியாசிகளாக மாறும்போது தலைக் குடுமி மற்றும், முப்புரி நூலை ஏன் துறக்கிறார்கள் என்பது பற்றிய தொடர்ச்சியான மற்றும் நீண்ட விவாதத்திற்கு இந்த உரை குறிப்பிடத்தக்கது. [10] அவர்களின் முடியும் முப்புரி நூலும் வெளிப்புறமாகத் தெரிவதில்லை. ஆனால் உட்புறம் உணர்வார்கள் என உரை கூறுகிறது. அறிவின் வடிவத்தில் மற்றும் ஆத்மா-பிரம்மன் பற்றிய அவர்களின் விழிப்புணர்வு பிரபஞ்சத்தை ஒருமைப்படுத்தப்பட்ட ஒருமைக்குள் இழைக்கிறது. [10]

பரப்பிரம்ம உபநிடதம் பிரம்மாவை மனிதன் விழித்திருக்கும்போது உணர்வோடும், விஷ்ணுவை கனவு நிலையில் உள்ள அவனது உணர்வோடும், சிவனை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அவனது உணர்வோடும், பிரம்மத்தை துரியமாக, நான்காவது உணர்வோடும் இணைக்கிறது. [11] உச்சிக் குடுமி மற்றும் முப்புரிநூல் அணிபவர்களை, ஆன்மீக சுய அறிவைப் பெறாத வெற்று சின்னங்களைக் கொண்ட "போலி-பிராமணர்கள்" என்று உபநிடதம் அழைக்கிறது. [12] [8]

உண்மையான நம்பிக்கையாளர், உண்மையான விடுதலை தேடுபவர், உரையை வலியுறுத்துகிறார், இந்த வெளிப்புற அடையாளங்களை விட்டுவிட்டு, தனது ஆன்மாவின் தன்மை, இறுதி யதார்த்தம் மற்றும் இதயத்தில் உள்ள உணர்வு ஆகியவற்றை தியானிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்துகிறார். [13] அவர் வேதத்தை அறிந்தவர், நல்ல நடத்தை உடையவர், அவருடைய சரத்தின் இழைகள் உண்மையான கொள்கைகள், மேலும் அவர் அறிவை உள்ளுக்குள் அணிந்துள்ளார். [8] அவர் வெளிப்புற சடங்குகளுக்கு கவனம் செலுத்துவதில்லை, அவர் ஓம் மற்றும் ஆன்மா மூலம் விடுதலைக்காக உள் அறிவை அர்ப்பணிக்கிறார்.[8] [13]

பரப்பிரம்ம உபநிடதத்தின் முதல் அத்தியாயம் மிகவும் பழமையான பிரம்ம உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தைப் போன்றது.[14] [15] இந்த உரை கதாசுருதி உபநிடதத்துடன் பல பிரிவுகளையும் பகிர்ந்து கொள்கிறது.[16] [13] சாந்தோக்கிய உபநிடதம் பகுதி 6.1, மற்றும் அருணேய உபநிடதம் அத்தியாயம் 7 ஆகியவற்றிலிருந்து சமசுகிருத உரையின் துண்டுகளையும் உரை குறிப்பிடுகிறது.

Remove ads

காலம்

பரப்பிரம்ம உபநிடதம் இயற்றப்பட்ட தேதியோ அல்லது ஆசிரியர் பற்றியோ தெரியவில்லை. ஆனால் அத்தியாயம் 1 தவிர மற்றவை பிரம்ம உபநிடதத்திலிருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளது மீதமுள்ள உரை இடைக்காலத்தின் பிற்பகுதியில் எழுதப்பட்டதாக இருக்கலாம்.[17] ஆலிவெல், இசுபுரோகாப் போன்ற இந்தியவியலாளர்கள்f இது 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு உரையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். [18] [19]

இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகள் சில சமயங்களில் பரப்பிரம்மோபநிடதம் என்று பெயரிடப்பட்டுள்ளன.[8][20] இராமனால் அனுமனுக்கு விவரிக்கப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 78-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Remove ads

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads