பழவங்காடி கணபதி கோயில்

From Wikipedia, the free encyclopedia

பழவங்காடி கணபதி கோயில்map
Remove ads

பழவங்காடி கணபதி கோயில் (Pazhavangadi Ganapathy Temple) இந்தியாவின் கேரளா மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவிக்ரகம் ஸ்ரீமகாகணபதி (வினாயகர்) ஆகும். இக்கோவிலின் வினாயகர் சிலையானது, வலது காலை மடித்து உட்கார்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் ஸ்ரீகணபதியின் சிலையானது 32 வெவ்வேறு விதமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் தர்மசாஸ்தா, துர்கை அம்மன், நாகராஜா ஆகிய கடவுள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் பழவங்காடி கணபதி கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

வரலாறு

முதலில் இக்கோவிலானது முதலில் நாயர்களால் நிர்மாணித்து பராமரிக்கப்பட்டது. இவர்கள் பத்மனாபபுரம் அரண்மனையில் திருவாங்கூர் அரசவையில் போர்வீரர்களாக இருந்தனர். பின்னர் இந்திய ராணுவத்தின் கீழ் திருவாங்கூர் சமஸ்தானம் வந்த பின்னர் இக்கோவிலானது இந்திய ராணுவத்தால் பராமரிக்கப்பட்டது.

வழிபாடுகள்

இக்கோவிலின் முக்கிய வழிபாடு தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதாகும். மேலும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது. அப்பம், மோதகம் போன்றவையும் வழிபாட்டின் போது இங்கு படைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

இக்கோவிலின் முக்கியத் திருவிழா வினாயகர் சதுர்த்தி ஆகும். மேலும் கணேஷ் ஜெயந்தி, விரத சதுர்த்தி, சங்கஸ்தி சதுர்த்தி போன்ற வழிபாடுகளும் நடக்கும். திருவோணம், விஜயதசமி, விஷூ மற்றும் மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படும்

உடைக் கட்டுப்பாடு

வழக்கமான எல்லாக் கேரளா கோயில்களைப் போலவே இங்கும் பாரம்பரிய உடை அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆண்கள் கீழே வேட்டி எனப்படும் முண்டு அணிந்து, மேலே சட்டை அணியாமலும் செல்ல வேண்டும். பெண்கள் பாரம்பரிய உடையான சேலை அணிந்து செல்ல வேண்டும்.

அமைவிடம்

இக்கோயிலானது திருவனந்தபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 0.5 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. இக்கோவிலின் அமைவிடம் 8.2858°N 76.5637°E / 8.2858; 76.5637.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads