பாக் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக் மாவட்டம் (Bagh District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பாக் நகரம் ஆகும். 770 [[சதுர கிலோ மீட்டர்] பரப்பளவு[3] கொண்ட பாக் மாவட்டத்தின், 2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 3,71,919 ஆகும்.[4] இம்மாவட்டதின் அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், மக்கள் பகாரி மொழி மற்றும் குஜ்ஜர் மொழிகளைப் பேசுகின்றனர். உருது மொழியில் பாக் என்பதற்கு தோட்டம் என்று பொருள். இம்மாவட்டத்தில் பாக் கோட்டை உள்ளது.[5]
Remove ads
அமைவிடம்
பாக் மாவட்டத்தின் வடக்கில் முசாஃபராபாத் மாவட்டம், அத்தியான் பாலா மாவட்டம் மற்றும் இந்தியாவில் பாரமுல்லா மாவட்டங்களும், கிழக்கில் அவேலி மாவட்டம், தெற்கில் பூஞ்ச் மாவட்டமும், மேற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்

பாக் மாவட்டம் 5 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:[1]
- பாக் தாலுகா
- தீர்கோட் தாலுகா
- ஹரி கெல் தாலுகா
- ரெரா தாலுகா
- பீர்பனி தாலுகா
புவியியல்
பீர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்த பாக் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரமான ஹாஜி-பீர் கணவாய் 3421 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மாவட்டம் மலைக்காடுகளால் சூழ்ந்துள்ளது.[6]
தட்பவெப்பம்
பாக் மாவட்டத்தின் வெப்பம் சாதாரனமாக 2 °C முதல் 40 °C வரை இருக்கும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads