பாண்டுரங்க வாமன் காணே

சாகித்திய அகாதமி விருது பெற்ற சமசுகிருத எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

பாண்டுரங்க வாமன் காணே
Remove ads

முனைவர். பாண்டுரங்க வாமன் காணே (Dr. Pandurang Vaman Kane, மராத்தி: डॉ. पांडुरंग वामन काणे) (பிறப்பு : மே 7, 1880 - இறப்பு : மே 8, 1972) பரவலாக அறியப்பட்ட ஓர் இந்தியவியலாளரும் சமசுகிருத அறிஞரும் ஆவார். இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் சித்பவன் என்ற சிற்றூரில் பழமைவாத பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரைப் பற்றி புகழ்பெற்ற வரலாற்றாளர் பேராசிரியர் ராம் சரண் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்:

"சமசுகிருதத்தில் புலமை வாய்ந்த சமூக சீர்த்திருத்தவாதி பாண்டுரங்க வாமன் காணே பழங்கால கல்வி வழக்கங்களை தொடர்ந்தார். இருபதாம் நூற்றாண்டில் ஐந்து பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இவரது "தர்மசாத்திரத்தின் வரலாறு" என்ற படைப்பு பழங்கால சமூக சட்டங்களையும் வழக்கங்களையும் தொகுத்த ஒரு கலைக்களஞ்சியமாகும். இது தொன்மை இந்தியாவின் சமூக செயல்பாடுகளை ஆய்வு செய்ய எமக்கு மிகவும் உதவியது"'[3].

விரைவான உண்மைகள் மகாமகோபாத்தியாயபாண்டுரங்க வாமன கானேமாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் (நியமன உறுப்பினர்) ...
Remove ads

விருதுகள்

முனைவர் காணே மகாமகோபாத்யாயர் (மகா+மகா+உபாத்தியாயர் = மிகச்சிறந்த ஆசிரியர்) என அறியப்பட்டார்.மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார். இந்தியவியல் படிப்புக்களுக்கான குருக்சேத்திரா பல்கலைக்கழகத்தை துவங்க இவரது வழிகாட்டுதல் கோரப்பட்டது. 1956ஆம் ஆண்டில் இவரது "தர்ம சாத்திரத்தின் வரலாறு" என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பாரதிய வித்யா பவனின் கௌரவ அங்கத்தினராக இருந்தார்.

கல்வித்துறையில் இவரது சீர்மிகு பங்களிப்புகளுக்காக மாநிலங்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1963ஆம் ஆண்டில் நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

பிற மூலங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads