பாதரசம்(II) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

பாதரசம்(II) அசிட்டேட்டு
Remove ads

பாதரசம்(II) அசிடேட்டு (Mercury(II) acetate) என்பது Hg(O2CCH3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலத்தின் பாதரசம்(II) உப்பான இது மெர்குரிக் அசிடேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பொதுவாக சுருக்கமாக Hg(OAc)2 என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. நிறைவுறாத கரிம முன்னோடிச் சேர்மங்களிலிருந்து கரிமப்பாதரச சேர்மங்களை உருவாக்க ஒரு வினைபொருளாகப் பாதரசம்(II) அசிடேட்டு பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிறத்தில் நீரில் கரையக்கூடிய திடப்பொருளாகக் காணப்படுகிறது. ஆனால் சில மாதிரிகள் சிதைவு காரணமாக காலப்போக்கில் மஞ்சள் நிறமாகத் தோன்றும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

கட்டமைப்பு

பாதரசம்(II) அசிடேட்டு Hg-O பிணைப்பு தூரம் 2.07 Å கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட Hg(OAc)2 மூலக்கூறுகளைக் கொண்ட ஒரு படிகத் திடப்பொருளாகும். மூன்று நீண்ட, பலவீனமான இடைக்கணிப்பு Hg···O பிணைப்புகள் சுமார் 2.75 Å நீளத்தில் உள்ளன. இதன் விளைவாக Hg இல் சற்று சிதைந்த சதுர பிரமிடு ஒருங்கிணைப்பு வடிவம் உள்ளது.[2]

தயாரிப்பு

பாதரச(II) ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பாதரசம்(II) அசிடேட்டு உருவாகும்.[3]

HgO + 2 CH3COOH → Hg(CH3COO)2 + H2O

கனிமவேதியியல் வினைகள்

அசிட்டிக் அமிலக் கரைசலில் உள்ள பாதரசம்(II) அசிடேட்டு H2S உடன் வினைபுரிந்து HgS சேர்மத்தின் கருப்பு (β) வடிவ உருவத்தை விரைவாகத் தருகிறது. குழம்பை மெதுவாக சூடாக்கினால், கருப்பு திடப்பொருளானது சிவப்பு நிறமாக மாறுகிறது.[4] சின்னபார் கனிமம் சிவப்பு HgS ஆகும். ஐதரசன் சல்பைடைப் பயன்படுத்தி HgS மற்றும் வேறு சில சல்பைடுகளின் வீழ்படிவு தரமான கனிம பகுப்பாய்வில் ஒரு படியாகும்.

கரிமவேதியியல் வினைகள்

எலெக்ட்ரான் நிறைந்த அரீன்கள் Hg(OAc)2 உடன் சேர்த்து சூடுபடுத்தும்போது பாதரசமேற்றத்திற்கு உட்படுகின்றன. இந்த நடத்தை பீனால் சேர்மத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது:

C6H5OH + Hg(OAc)2 → C6H4(OH)-2-HgOAc + HOAc

பாதரசத்துடன் இருக்கும் அசிடேட்டு குழு (OAc) குளோரைடு மூலம் இடமாற்றம் செய்யப்படுகிறது:[5]

C6H4(OH)-2-HgOAc + NaCl → C6H4(OH)-2-HgCl + NaOAc

Hg2+ மையம் ஆல்க்கீன்களுடன் பிணைகிறது, ஐதராக்சைடு மற்றும் ஆல்காக்சைடு சேர்க்கப்படுவதைத் தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக, மெத்தனாலில் உள்ள பாதரச அசிடேட்டுடன் மெத்தில் அக்ரைலேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் α-பாதரச எசுத்தர் உருவாகிறது:[6]

Hg(OAc)2 + CH2=CHCO2CH3 + CH3OH → CH3OCH2CH(HgOAc)CO2CH3 + HOAc

கந்தக ஈந்தணைவிகளுக்கு பாதரசத்தின்(II) மீதான அதிகப்பிணைப்பு நாட்டத்தைப் பயன்படுத்தி, பாதரசம்(II) அசிடேட்டானது கரிமத் தொகுப்பு வினைகளில் தயோல் குழுக்களைப் பாதுகாப்பதற்கான வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் தயோகார்பனேட்டு எசுத்தர்களை டைதயோகார்பனேட்டுகளாக மாற்றவும் பாதரசம்(II) அசிடேட்டு பயன்படுத்தப்படுகிறது:

(RS)2C=S + H2O + Hg(OAc)2 → (RS)2C=O + HgS + 2 HOAc

ஆல்க்கீனை நடுநிலை ஆல்ககாலாக மாற்றும் ஆக்சிபாதரசமேற்ற வினைகளிலும் பாதரசம்(II) அசிடேட்டு பயன்படுகிறது.

ஐடாக்சுரிடின் என்ற வைரசு எதிர்ப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுவது பாதரசம்(II) அசிடேட்டின் முக்கியமான பயனாகும்.

Remove ads

நச்சுத்தன்மை

நீரில் கரையும் என்பதாலும் பாதரச அயனிகளைக் கொண்டிருப்பதாலும் பாதரசம்(II) அசிடேட்டு மிகவும் நச்சுத் தன்மை மிகுந்த வேதிச் சேர்மமாகும். புற நரம்பியல், தோல் நிறமாற்றம் மற்றும் சிதைவு (தோல் உரித்தல் மற்றும்/அல்லது உதிர்தல்) ஆகியவை பாதரச நச்சுத்தன்மையின் அறிகுறிகளில் அடங்கும்.[7] நாள்பட்ட பாதரசம்(II) அசிடேட்டு வெளிப்பாட்டினால் நுண்ணறிவு குறைதலும் சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம்.[8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads