பாரத் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரத் பல்கலைக்கழகம் (Bharath University) அல்லது பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் (BIHER) அல்லது பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம் (BIST) தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், உயர்கல்விக்கான இந்திய நிறுவனமும் ஆகும். பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை 'ஏ' தரநிலை வழங்கியுள்ளது.[2]
Remove ads
வரலாறு
பாரத் பல்கலைக்கழகம் 1984ஆம் ஆண்டு எஸ்.ஜகத்ரட்சகனால் பாரத் பொறியியல் கல்லூரி என நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் துவக்கத்தில் நிறுவப்பட்ட தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இது ஒன்றாக இருந்தது.[3] இந்தப் பொறியியல் கல்லூரி முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்துடனும் பின்னர் அண்ணாப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு இக்கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலையை வழங்கியது. அப்போது இதன் பெயர் பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் என மாற்றப்பட்டது. செப்டம்பர் 2006இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பெயர்களில் பல்கலைக்கழகம் என்ற ஒட்டை வைத்துக்கொள்ளலாம் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பினை அடுத்து இதன் பெயர் பாரத் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
Remove ads
வளாகங்கள்
பாரத் பல்கலைக்கழகம் நான்கு வளாகங்களிலிருந்து செயல்படுகின்றது. இவற்றில் மூன்று சென்னையிலும் ஒன்று புதுச்சேரியிலும் உள்ளன.[4]
பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம், சென்னை
இதுவே 1984இல் நிறுவப்பட்ட முதன்மை வளாகமாகும். இது துவக்கத்தில் 'பாரத் பொறியியல் கல்லூரி' என்று பெயரிடப்பட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலை எய்தியபோது, இதன் பெயர் 'பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம்' என மாற்றப்பட்டது. 2003இல் 'பாரத் பல்கலைக்கழகம்' உருவானபோது, இக்கல்லூரிக்கு 'பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம்' எனப் பெயரிடப்பட்டது.
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
இக்கல்லூரி 2004ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதே வளாகத்தில் ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரியும் உள்ளது.
ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம், புதுச்சேரி
இக்கல்லூரி 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
இக்கல்லூரி 2002ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதே வளாகத்தில் 2007ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
Remove ads
சகோதர நிறுவனங்கள்
- தாகூர் பொறியியல் கல்லூரி, சென்னை (நிறுவல்: 1998, இணைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்),[5]
- தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை (நிறுவல்: 2010, இணைப்பு: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்),[6]
- ஜெருசேலம் பொறியியல் கல்லூரி, சென்னை (நிறுவல்: 1994, இணைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்),[7]
- ஸ்ரீ இலட்சுமி அம்மாள் பொறியில் கல்லூரி, சென்னை (நிறுவல்: 2001, இணைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்),[8][9]
- பாரத் பல்நுட்பக் கல்லூரி, சென்னை (நிறுவல்: 1995, ஏற்பு: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு).
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads