பாறசாலை மகாதேவர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாறசாலை மகாதேவர் கோயில் என்பது தெற்கு கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள முக்கியமான வழிபாட்டு மையங்களில் ஒன்றாகும்.
இந்தக் கோயில் கேரளா - தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள பாறசாலை என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.[1] இங்கு மூலவரான சிவபெருமான் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார், இது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. தொலைதூர இடங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்த வருகிறார்கள். இது வேணாடு அரச குடும்பத்தைச் சேர்ந்த மல்லன் செண்பகராமன் தேலவா என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் பார்வதி கிழக்கு நோக்கிய நிலையில், பின்புறத்தில் உள்ளார்.
இக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானதாகும். அரிய கல் கட்டிடக்கலையைச் சேர்ந்தது. இங்கு பார்வதி தேவி, விக்னேஸ்வரா ஆகியோர் துணை தெய்வங்களாக உள்ளனர். இக்கோயில் அரிய சடங்குகளுக்கு புகழ் பெற்றதாகும். சாதி, மதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் இக்கோயிலில் முக்கியமான சடங்குகளை ஆரம்பிக்கும் பெருமையினைப் பெற்றுள்ளது. இறைவன் சாதி, மதம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு, வேறுபாடின்றி அனைவருக்கும் இறைவன் அருள்புரிவான். இத்தலமானது மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்றதாகும்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads