பாலாஜி விஸ்வநாத்

மராத்தியப் பேரரசின் ஆறாவது தலைமை அமைச்சர் From Wikipedia, the free encyclopedia

பாலாஜி விஸ்வநாத்
Remove ads

பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் (Balaji Vishwanath) (1662–1720), சிவாஜி நிறுவிய மராத்தியப் பேரரசின் ஆறாவது தலைமை அமைச்சரும், கொங்கணி பட் பிராமண சமூகத்தின் முதல் பேஷ்வாவும் ஆவார். மராத்தியப் பேரரசர் சாகுஜியின் தலைமை அமைச்சராக விளங்கிய பாலாஜி விஸ்வநாத் காலத்தில், மராத்தியப் பேரரசு, அவுரங்கசீப் மற்றும் தக்காண சுல்தான்களையும் எதிர்த்து நின்றது.[1]இவருக்குப் பின் இவரது மகன் பாஜிராவ், மராத்திய பேஷ்வாவாகப் பொறுப்பு ஏற்றார். இவரது இரண்டாவது மகன் சிம்னாஜி அப்பா வசாய் கோட்டையைக் கைப்பற்றினார்.

விரைவான உண்மைகள் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத், ஆட்சிக்காலம் ...
Remove ads

இளமையும் தொழிலும்

இளமையில் பாலாஜி விஸ்வநாத், மராத்தியப் பேரரசின் படைத்தலைவர் தானாஜி ஜாதவ்வின் கணக்காளராகப் பணியில் சேர்ந்தார். [2] 1699 மற்றும் 1702ல் புனே கோட்டையின் தலைமை நிர்வாகியாகவும், பின்னர் 1704 முதல் 1707 முடிய தௌலதாபாத் கோட்டையின் தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 1708ல் சத்திரபதி சாகுஜியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.[3][4]

பேஷ்வா பதவியில்

மராத்தியப் பேரரசின் பேஷ்வா பாஹிரோஜி பிங்களனை கைது செய்து பிணைக்கைதியாக வைத்திருந்த கப்பற்படைத்தலைவர் கனோஜி ஆங்கரேவுடன், பாலாஜி விஸ்வநாத் லோணாவ்ளா எனுமிடத்தில் சந்தித்து அமைதிப்படுத்தினார். பின்னர் கனோஜியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். கனோஜி ஆங்கரேவை மராத்தியப் பேரரசின் தலைமைக் கப்பற்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாலாஜி விஸ்வநாத்தின் திறைமையைப் பாராட்டிய மராத்திய பேரரசர் சாகுஜி, அவரையே தமது பேஷ்வா எனும் தலைமை அமைச்சராக 16 நவம்பர் 1713 அன்று நியமித்துக் கொண்டார். [5],[6].

1719ல் பாலாஜி விஸ்வநாத் தலைமையில் சென்ற மராத்தியப் படைகள், தில்லி நோக்கிப் படையெடுத்து, முகலாயப் பேரரசின் தூண்களை சரித்தார். [7]

Remove ads

வட இந்தியா மீதான படையெடுப்புகள்

1707 அவுரங்கசீப் மறைவிற்குப் பின் முகலாயப் பேரரசராக பதவி ஏற்ற முதலாம் பகதூர் சாவினால், முகலாய அரச குடும்பத்தில் பல குழப்பங்களும், சதித் திட்டங்களும் நிறைவேறின. 1713ல் முகலாய அரசவைப் பிரபுக்களான சையத் உசைன் அலி கான் மற்றும் சையத் அப்துல்லா கான் ஆகியோரின் உதவியால் தில்லியின் அரியணை ஏறினார் பரூக்சியார் .

1718ல் மராத்தியர்களை ஒடுக்க, சையத் உசைன் அலி கான் தக்காண ஆளுநராக நியமிக்கப்பட்டார். பாலாஜி விஸ்வநாத் தலைமையிலான மராத்தியப் படைகள் கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் சையத் உசைன் அலி கான் படைகளை வென்றனர். போரில் தோல்வி அடைந்த முகலாயர்களின் தக்கான ஆளுநர், பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தக்கானப் பிரதேசத்தில் சௌத் வரி (நாலில் ஒரு பங்கு) நில வரியும், சர்தேஷ்முக் எனும் பத்தில் ஒரு பங்கு கூடுதல் வரியையும் வசூலித்துக் கொள்ளும் உரிமை மராத்தியப் பேரரசிற்கு கிடைத்தது.

ஆனால் இவ்வொப்பந்தத்தை ஏற்காத தில்லிப் பேரரசர் பரூக்சியார், சையத் குடும்பத்தினரைக் கொல்ல உத்தரவிட்டார். இதனால் கோபமடைந்த சையத் குடும்பத்தினர், பாலாஜி விஸ்வநாத் படைகளுடன் தில்லி சென்று, முகலாயப் பேரரசர் பருக்சியாரை அரியணையிலிருந்து இறக்கி, பிப்ரவரி 1719ல் ரபி உல்-தர்ஜாத் என்ற சிறுவனை பொம்மை அரசனாக்கி, தக்கான உடன்படிக்கையை ஏற்க வைத்தனர். மேலும் சத்திரபதி சாகுஜியையும், அவரது வழித்தோன்றல்களையும் மராத்திய பேரரசர்களாக, தில்லி முகலாயர்கள் அங்கீகாரம் வழங்கினர். [8]..

முன்னர்
பாகிரோஜி பிங்களா
பேஷ்வா
1713–1720
பின்னர்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads