பினாங்கு நகர மண்டபம்
மலேசியாவின் பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுன் நகரின் உள்ளூர் அரசாங்க தலைமையகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாங்கு மாநகர மண்டபம் (ஆங்கிலம்: Penang City Hall; மலாய்: Dewan Bandaraya Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு ஜார்ஜ் டவுன் நகரில் உள்ள உள்ளாட்சி அரசாங்க தலைமையகம் (Local Government Headquarters) ஆகும்.
தற்சமயம் பினாங்கு தீவு மாநகராட்சியின் (Penang Island City Council) தலைமையகமாகச் செயல்படுகிறது. அதற்கு முன்னர் ஜார்ஜ் டவுன் நகராட்சியின் (George Town City Council) தலைமையகமாகவும் இருந்தது.[1]
இந்த பினாங்கு மாநகர மண்டபம், 1903-ஆம் ஆண்டில், ஊராட்சி அலுவலகமாக (Municipal Office) பிரித்தானியர்களால் கட்டப்பட்டது. இப்போதைய பினாங்கு மாநகர மண்டபத்திற்கு எதிர்ப்புறமாய் பழைய ஊராட்சி அலுவலகம் (Town Hall) இருந்தது.
அங்கு இடநெருக்கடி ஏற்பட்டதால் இந்த பினாங்கு மாநகர மண்டபம் $ 100,000 (Straits Dollar) செலவில் புதிதாய்க் கட்டப்பட்டது.[1][2]
Remove ads
பொது
மாநகர மண்டபம் (City Hall) என்ற பெயர் 1957-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன் நகருக்கு நகத் தகுதி கிடைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. மாநகர மண்டபம் மற்றும் நகர மண்டபம் (Town Hall) இரண்டும் எசுபிளனேட் சாலையில் (Esplanade Road) அமைந்துள்ளன.
எசுபிளனேட் எனும் முற்றவெளியில் உள்ள வரலாற்று அணிவகுப்புத் திடலுக்கு எதிர்ப்புறமாய் மாநகர மண்டபம் அமைந்துள்ளது. இந்த இரு கட்டிடங்களும் ஜார்ஜ் டவுன் யுனெசுகோ (UNESCO) உலக பாரம்பரிய தளத்தில் அமைந்துள்ளன.
Remove ads
கட்டிடக்கலை
1903-இல் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி பினாங்கு மாநகர மண்டபம், எட்வர்டியன் பரோக் (Edwardian Baroque Architecture) மற்றும் பல்லடியன் கட்டிடக்கலை (Palladian Architecture) பாணிகளைக் கொண்டது. 1982-ஆம் ஆண்டு முதல் மலேசிய தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. [3]
பினாங்கு மாநகர மண்டபம் கடைசியாக 2004 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புதுப்பிக்கப்பட்டது. மாநகர மண்டபம் அதன் அசல் வடிவத்தை தக்க வைத்துக் கொண்டாலும், தரை தளத்தில் உள்ள அசல் கட்டிடக்கலையில் புதிய சாளரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads