பிரசந்தா சந்திரா மகாலனோபிசு

From Wikipedia, the free encyclopedia

பிரசந்தா சந்திரா மகாலனோபிசு
Remove ads

பிரசந்தா சந்திர மகாலனோபிசு வேத்தியக் குமுகப் பேராளர்(FRS) (Prasanta Chandra Mahalanobis) (Bengali: প্রশান্ত চন্দ্র মহলানবিস) (29 சூன் 1893 – 28 சூன் 1972) ஓர் இந்திய அறிவியலாளரும் பயன்முக புள்ளியியல் அறிஞரும் ஆவார். மகாலனோபிசுத் தொலைவு என்னும் இவருடைய புள்ளியியல் அளவீடு ஒன்றுக்காக இவர் அறியப்படுகின்றார். இந்தியாவில் மாந்த உடலிய அளவீடுகளுக்கு முன்னணியான பங்களிப்புகள் செய்தவர். இந்தியப் புள்ளியியல் கழகத்தை இவர் நிறுவியதற்காகவும், பெரிய அளவில் கருத்துக் கணிப்பு செய்வதற்கான முறைகள் வகுத்ததற்கும் இவர் அறியப்படுகின்றார்[1][2][3]

விரைவான உண்மைகள் பிரசந்தா சந்திர மகாலனோபிசு, பிறப்பு ...
Remove ads

குடும்பம் மற்றும் படிப்பு

அவரது குடும்பம் பங்களாதேசில் உள்ள பிக்ராம்பூரை சேர்ந்ததாக் இருந்தது. அவர் சமுதாய சீர்திருத்தவாதிகள் மற்றும் அறிவாற்றல் மிகுந்தவர்கள் உள்ள சூழலில் வளர்ந்தார். அவரது ஆரம்பகால கல்வியை கல்கட்டாவில் உள்ள பிராமோ ஆண்கள் பள்ளியில் பயின்றார். அவர் பிரிசிடென்சி கல்லூரியில் சேர்ந்து இயற்பியலை சிறப்பு பாடமாக எடுத்து பி.எஸ்.சி. எனும் இளம் கலை பட்டம் பெற்றார். அதன் பின் 1913 –ல் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்ற அவர், அங்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற எஸ்.இராமானுஜத்துலன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.

Remove ads

புள்ளியியலில் ஆர்வம்

அவருடைய மேற்படிப்பு முடிந்தவுடன் இந்தியா திரும்பிய அவர் பிரிசிடென்சி கல்லூரியின் முதல்வர் எனும் பணியில் சேர்ந்து இயற்பியல் சம்பந்தபட்ட வகுப்புகளை எடுத்தார். உடனடியாக அவர் அறிமுகப்படுத்திய புள்ளியியலின் முக்கியத்துவம், வானியியல் மற்றும் மானுடவியல் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக உணர்ந்தனர். அவரது சகாக்கள் பலரும் புள்ளியியல் துறையில் ஆர்வம் காட்டியதன் விளைவாக பிரிசிடென்சி கல்லூரியில் அவரது அறை ஒரு சிறிய புள்ளியியல் துறையின் பரிசோதனை கூடமாக மாறியது. அதில் சிலர் பிரமதா நாத் பானர்ஜி, நிகில் ரஞ்சன் சென் மற்றும் சர்.ஆர்.கே.முகர்ஜி ஆகியோர் மிகவும் சிறப்பாக கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள். இத்தகைய கலந்தாய்வுகள் மற்றும் கூட்டங்களும் தான் இந்திய புள்ளியியல் கழகத்தை நிறுவி அதை 28 ஏப்ரல் 1932-ல் முறைப்படி பதிவும் செய்யப்பட்டது. முதலில் இந்த நிறுவனம் பிரிசிடென்சி கல்லூரியின் இயற்பியல் துறையில் செயல்பட்டது. சில காலம் சென்ற பிறகு விரிவாக்கம் செய்யப்பட்டது. அவரின் மிகவும் முக்கியமான பங்களிப்புகள் பெரிய அளவில் மாதிரிகளை கணக்கெடுப்பதில் தொடர்புடையதாக இருந்தது. சோதனை கணக்கீடுகள் மற்றும் மாதிரி முறைகளின் கருத்துக்களுக்கு முன்னோடியாக இருந்தார். பயிர் மகசூல் அளவிடும் முறையை அறிமுகப்படுத்தினார். பின்னாளில் இந்திய திட்டகுழுவின் உறுப்பினர் ஆனார். இந்திய திட்டகுழு உறுப்பினராக இருந்த காலத்தில், இந்தியாவின் ஐந்தாண்டு திட்டத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு அவருடைய மாதிரிகளை நடைமுறைபடுத்தியதால், நாட்டின் தொழிற்துறை விரைவாக முன்னேற உதவி புரிந்த்து. இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுக்கும் முறைகளிலும் சில பிழைகளை சரி செய்தார். புள்ளியியல் துறை தவிர கலாச்சாரத்திலும் ஆர்வம் கொண்டு விளங்கினார். இரவீந்தரநாத் தாகூர் அவர்களிடம் செயலாளராக பணிபுரிந்தார். குறிப்பாக புகழ்பெற்ற அந்த கவிஞரின் வெளிநாட்டு விஜயத்தின் போது விஸ்வாசமாக இருந்தார்.

Remove ads

பெற்ற விருதுகள்

மகாலனோபிஸ்ஸிருக்கு , நம் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான உயர்ந்த குடிமகன் என்ற விருதினை பாரதி பல்கழைகழகம் அவருக்கு அளித்து கெளரவப்படுத்தியது. புள்ளியியல் அறிவியியல் துறையில் மத்தான பங்களிப்பிற்காக பத்ம விபூசன் என்ற விருதையும் வழங்கியது இந்திய அரசாங்கம்.

இறுதி காலம்

மகாலனோபிஸ் அவர்கள் தனது 78-ம் வயதில் ஜூன் 28, 1972 ஆம் ஆண்டு மறைந்தார். அந்த வயதிலும் தனது ஆராய்ச்சிகளை தொடர்ந்தார் மற்றும் தன்னுடைய கடமைகள் அனைத்தையும் சரிவர செய்தார். அவரது பிறந்த தினமான ஜூன் 29 – ஐ நமது அரசாங்கம் 2006 – ல் தேசிய புள்ளியியல் தினமாக அறிவித்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads