பிரெடிரிக் சில்லர்

From Wikipedia, the free encyclopedia

பிரெடிரிக் சில்லர்
Remove ads

யோகன் கிறிசுடோப் பிரெடிரிக் பொன் சில்லர் (Johann Christoph Friedrich von Schiller, இடாய்ச்சு: [ˈjoːhan ˈkʁɪstɔf ˈfʁiːdʁɪç fɔn ˈʃɪlɐ]; 10 நவம்பர் 1759  9 மே 1805) செருமானிய கவிஞரும் மெய்யியலாளரும் வரலாற்றாளரும் நாடகாசிரியரும் ஆவார். தனது வாழ்நாளின் கடைசி பதினேழு ஆண்டுகளில் (1788–1805), சில்லருக்கு ஏற்கெனவே புகழ்பெற்றிருந்த யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவுடன் ஆக்கபூர்வ நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி அழகியல் குறித்து உரையாடி வந்தனர்; கேத்தெ வரைகோடுகளாக நிறுத்தி வைத்திருந்த ஆக்கங்களை கலைவடிவமாக முழுமையாக்க சில்லர் ஊக்குவித்தார். இந்த நட்பும் உரையாடல்களும் தற்போது வைமார் செவ்வியல் எனக் குறிக்கப்பெறும் வரலாறுக் காலத்திற்கு வழிவகுத்தன. இருவரும் இணைந்து தங்கள் மெய்யியல் கோட்பாடுகளை எதிர்த்தவர்களை நோக்கி இயற்றிய அங்கதமிக்க சிறு கவிதைகள் தொகுக்கப்பெற்று சீனியன் என அறியப்பெற்றது.

விரைவான உண்மைகள் பிரெடிரிக் ஷில்லர், பிறப்பு ...
Thumb
கேத்தெவும் ஷில்லரும் (வலது) இணைந்த நினைவுச்சின்னம், வைமார்.
Remove ads

ஆக்கங்கள்

நாடகங்கள்

  • டீ ராய்பர் (திருடர்கள்) (1781)
  • கபாலுண்ட் லீபெ (கள்ளத்தொடர்பும் காதலும்) (1784)
  • டான் கார்லோசு (1787)
  • வாலென்சுடைன் (1800)
  • டீ யுன்ஃபிரா ஃபொன் ஆர்லியான்சு (ஆர்லியான்சின் பணிப்பெண்) (1801)
  • மாரியா இசுடீவர்ட்டு (1801)
  • டுரன்டாட் (1802)
  • டீ பிரௌட் ஃபொன் மெஸ்ஸினா (1803)
  • வில்லெம் டெல் (1804)
  • டெமெட்ரியசு (அவரது மரணத்தினால் முடிவுறவில்லை)

கவிதைகள்

  • ஊடெ அன் டீ பிராய்டெ அல்லது மகிழ்ச்சிப் பா (1785) - இது பேத்தோவனின் ஒன்பதாவது சிம்பனியின் நான்காவது இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
  • தி ஆர்ட்டிஸ்ட்ஸ்
  • தி கிரேன்சு ஆப் இபிகுசு
  • தி பெல்
  • கொலம்பஸ்
  • ஹோப்
  • பீகாசுசு இன் ஹார்னெஸ்
  • தி கிளோவ்
  • நானி - இதற்கு பிராம்சு இசையமைத்தார்.
Remove ads

மேற்சான்றுகள்

நூற்கோவை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads