1800
நாட்காட்டி ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1800 (MDCCC) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு "விதிவிலக்கான" கிரிகோரியன் சாதாரண ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும். 1800, பெப்ரவரி 28 வரை கிரிகோரியன் நாட்காட்டி ஜூலியன் நாட்காட்டியை விட 11 நாட்கள் முன்னதாக இருந்தது, ஆனால் 1800, மார்ச் 1 சனிக்கிழமை முதல் 12 நாட்கள் முன்னதாக இருந்தது.[1][2][3]
உலக மக்கள் தொகை ஒரு பில்லியனை தொட உள்ளது. இரண்டு ஆண்டுகளின் பின்னரே அம்மைல்கல் எட்டப்பட்டது. கண்டங்களின் படி மக்கள் தொகை:
- ஆப்பிரிக்கா: 107,000,000
- ஆசியா: 635,000,000
- சீனா: 300–400,000,000
- ஐரோப்பா: 203,000,000
- தென் அமெரிக்கா: 24,000,000
- வட அமெரிக்கா: 7,000,000
- கடல் பகுதிகள்: 2,000,000
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 1 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
- மார்ச் 14 - கர்தினல் பார்னபா சியரமொண்டி ஏழாம் பயசு என்ற பெயரில் 251வது திருத்தந்தையாக முடிசூடினார்.
- மார்ச் 20 – அலெசாண்ட்ரோ வோல்ட்டா தான் கண்டுபிடித்த முதலாவது மின்கலம் பற்றி அறிவித்தார்.
- ஏப்ரல் 24 - அமெரிக்கக் காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது.
- மே 5 – பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைவதற்கு பெரிய பிரித்தானியா சட்டமூலம் கொண்டு வந்தது. இது 1801, சனவரி 1 இல் நடைமுறைக்கு வந்தது.
- மே 15 - நெப்போலியன் பொனபார்ட் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலியினுள் நுழைந்தான்.
- சூன் 2 - பெரியம்மைக்கான முதலாவது தடுப்பூசி கனடாவில் தயாரிக்கப்பட்டது.
- சூன் 14 – ஆத்திரியப் படைகளை நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மரெங்கோ என்ற இடத்தில் தோற்கடித்தான்.
- ஆகத்து 2 - இலங்கை நில அளவைத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 5 – பிரித்தானியப் படையினர் மால்ட்டா மற்றும் கோசோ தீவுகளை பிரான்சிடம் இருந்து விடுவித்தனர்.
- செப்டம்பர் 30 - பிரான்சிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் குவாசி போர் முடிவுக்கு வந்தது.
நாள் அறியப்படாதவை
- இலங்கையின் வட பகுதியில் மாடுகளுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
1800 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads