பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார். தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர். இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர். “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்“ என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வைப் புலப்படுத்தும். இவரது பாடல்கள் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன. கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

இவரது திருப்பேரன் கோனேரியப்பன் ஐயங்கார்.[1]

Remove ads

அழகிய மணவாளதாசர்

பதினேழாம் நூற்றண்டில் வாழ்ந்த பெரும் புலவர்களில் ஒருவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். அழகிய மணவாளதாசர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. அஷ்டபிரபந்தம் என எட்டு சிற்றிலக்கியங்களை இயற்றிய இவர் இருமொழி புலமைப் பெற்றவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் திவ்விய பிரந்தசாரம் எனக் கூறுவர். சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன. அஷ்ட பிரபந்தங்கள்

  1. திருவரங்கக் கலம்பகம்
  2. திருவரங்கத்து மாலை
  3. திருவரங்கத்து திருவந்தாதி
  4. சீரங்கநாயகர் ஊசல்
  5. திருவேங்கட மாலை
  6. திருவேங்கடத்தந்தாதி
  7. அழகரந்தாதி
  8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads