புக்கிட் ஜெலுத்தோங்

சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

புக்கிட் ஜெலுத்தோங்map
Remove ads

புக்கிட் ஜெலுத்தோங், (மலாய்; ஆங்கிலம்: Bukit Jelutong; சீனம்: 武吉日落洞); என்பது மலேசியா, சிலாங்கூர், சா ஆலாம், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஓர் உயர்ரக புறநகர்ப் பகுதி ஆகும்.[2]

விரைவான உண்மைகள் புக்கிட் ஜெலுத்தோங், நாடு ...

2,200 ஏக்கர் (8.9 கிமீ2) பரப்பளவைக் கொண்ட இந்தப் புறநகர்ப் பகுதி ஒரு திட்டமிடப்பட்ட பகுதி ஆகும். இது சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்தின் துணை நிறுவனமான கத்ரி சொத்துடைமை (Guthrie Property Holding Berhad) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

புக்கிட் ஜெலுத்தோங் புறநகர்ப் பகுதியின் உயர்தர நிலையின் காரணமாக, புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள குடியிருப்பு அலகுகள் பெரும்பாலும் குறைந்த அடர்த்தி கொண்ட பங்களாக்கள் மற்றும் இரட்டை வீடுகளாகவும் உள்ளன. அத்துடன் சில மொட்டை மாடி வீடுகளும் உள்ளன. புக்கிட் ஜெலுத்தோங்கில் பல பூங்காக்கள் மற்றும் திறந்தவெளி புல்வெளிகளும் உள்ளன.[3]

Remove ads

வரலாறு

புக்கிட் ஜெலுத்தோங், முன்னாள் செம்பனைத் தோட்டமான புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி கும்புலான் கத்ரி நிறுவனத்திற்குச் (Kumpulan Guthrie Berhad) சொந்தமான பிற தோட்டங்களுடன் சேர்த்து கத்ரி பெருவழி (Guthrie Corridor) என்று அழைக்கப்பட்டது.[4]

கத்ரி நிறுவனத்தின் முதல் சொத்துத் திட்டமான புக்கிட் ஜெலுத்தோங், 840 எக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த நகரமாகும். செம்பனைத் தோட்ட நிலத்தை நகர நிலமாக மாற்றுவதற்காக கத்ரி நிறுவனம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு RM 50 மில்லியன் அதிகமாக வழங்கியது.[5]

புக்கிட் ஜெலுத்தோங்கின் வளர்ச்சி 1996-ஆம் ஆண்டு கத்ரி பெவிலியன் (Guthrie Pavilion) எனும் பிரதான கட்டிடத்தின் கட்டுமானத்துடன் தொடங்கியது.[6] தற்போது இந்தக் கட்டிடம் கத்ரி நிறுவனத்தின் தலைமையகமாகச் செயல்படுகிறது. கட்டுமானங்கள் தொடங்கியதில் இருந்து, புக்கிட் ஜெலுத்தோங் வீடமைப்புத் திட்டம்; சா ஆலாம் பெருநகர்ப் பகுதியில் மிகவும் விரும்பப்படும் வீட்டுவசதித் திட்டமாக உருவெடுத்துள்ளது.

Remove ads

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்

போக்குவரத்து

புக்கிட் ஜெலுத்தோங் சிறந்த சாலை வலையமைப்பால் சிறப்பான முறையில் சேவை செய்யப்படுகிறது. இந்தப் புறநகர்ப் பகுதி கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, சா ஆலாம், கிள்ளான் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பிற மக்கள்தொகை மையங்களுடன்; E1  வடக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (New Klang Valley Expressway), E35  கத்ரி பெருவழி விரைவுச்சாலை (Guthrie Corridor Expressway), 2 கூட்டாட்சி நெடுஞ்சாலை மற்றும் E6  மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway Central Link - ELITE) மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவுச்சாலைகள் புக்கிட் ஜெலுத்தோங்கை சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகியவற்றுடன் இணைக்கின்றன.

 KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம் மற்றும்  KD10  பத்து தீகா கொமுட்டர் நிலையம் ஆகியவை அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.

வணிகம்

புக்கிட் ஜெலுத்தோங்கில் ஒரு சிறிய வணிக மையம் உள்ளது, அங்கு பல்வேறு வணிகக் கடைகள் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மற்றும் இரைச்சலைத் தவிர்ப்பதற்காகவும், புறநகர்ப் பகுதியின் வளிமண்டலத்தைப் பராமரிக்கவும், இந்தப் பகுதி வேண்டுமென்றே பெரிய அளவிலான வணிகப் பகுதியாக மாறுவதில் இருந்து தவிர்க்கப்பட்டது.

தொழில்துறை

புக்கிட் ஜெலுத்தோங்கில் ஒரு தொழில்துறை பூங்கா உள்ளது. அந்தத் தொழில்துறை பூங்கா, புக்கிட் ஜெலுத்தோங்கின் கிழக்கு புறநகரில் அமைந்துள்ளது. அத்துடன் இந்தப் பூங்கா; உயர்த் தொழில்நுட்பத் தொழில்கள் மற்றும் தளவாடக் கிடங்குகள், குறைந்த அடர்த்தி கொண்ட தொழில்துறை பூங்காவாகும். இங்குள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும்.

Remove ads

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads